News June 19, 2024
மதிப்புமிக்க பிரபலங்களின் பட்டியலில் கோலி முதலிடம்

இந்தியாவின் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலில் விராட் கோலி 22.79 கோடி டாலர் பிராண்ட் மதிப்புடன் முதல் இடம் பிடித்துள்ளார். மும்பையைச் சேர்ந்த ‘குரோல்’ இந்தியாவில் மதிப்பு மிக்க பிரபலங்களின் பட்டியலை வெளியிட்டுள்ளது. அதில் கோலியைத் தொடர்ந்து ரன்வீர் சிங், ஷாருக் கான் முதல் 3 இடங்களில் உள்ளனர். அக்ஷய் குமார், ஆலியா, தீபிகா படுகோனே, தோனி, சச்சின், அமிதாப், சல்மான் அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
Similar News
News March 18, 2026
கரூர்: வாடகை வீட்டில் வசிப்பவர்கள் கவனத்திற்கு!

கரூரில், வாடகை வீட்டில் வசிப்பவர்கள், வாடகை உயர்வு, திடீர் வெளியேற்றம், முன்பண பிரச்சனை போன்ற பல்வேறு பிரச்சனைகளை எதிர்கொள்கின்றனர். வாடகை வீட்டில் குடியிருப்போர் உரிமைகளை பாதுகாக்க தனி சட்டமே உள்ளது. உங்கள் வீட்டின் உரிமையாளர் அதிக கட்டணம் வசூலித்தாலோ அல்லது தொந்தரவு செய்தாலோ, 1800 599 01234 என்ற தமிழக வீட்டுவசதித் துறையின் கட்டணமில்லா எண்ணில் புகார் அளிக்கலாம். (SHARE பண்ணுங்க)
News March 18, 2026
தேமுதிகவுக்கு 7 சீட் ஒதுக்கீடு?

வரும் 23-ம் தேதி தேமுதிக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெறும் என பிரேமலதா அறிவித்துள்ளார். இக்கூட்டத்தில் தேமுதிக வேட்பாளர் தேர்வு, தேர்தல் பிரசார உத்திகள் & தேமுதிகவின் தேர்தல் அறிக்கை குறித்து அவர் ஆலோசிக்க உள்ளதாக கூறப்படுகிறது. இதனிடையே, திமுக கூட்டணியில் தேமுதிகவுக்கு 7 சீட்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், ஒரிரு நாள்களில் ஒப்பந்தம் கையெழுத்தாக உள்ளதாகவும் தகவல் கசிந்துள்ளது.
News March 18, 2026
₹500 நோட்டுகள்.. புதிய உத்தரவு வெளியானது

தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பணப்பட்டுவாடாவை தடுக்க ரிசர்வ் வங்கி மூலம் ECI பணிகளைத் தொடங்கியுள்ளது. அனைத்து வங்கிக் கிளைகளிலும் ₹5 லட்சத்துக்கு மேல் ₹500 கட்டுகள் வழங்கக்கூடாது என RBI வாய்மொழி உத்தரவிட்டுள்ளதாம். அதேநேரம், ₹200, ₹100 நோட்டுகளுக்கு எவ்வித கட்டுப்பாடும் போடவில்லை என்றும் கூறப்படுகிறது. இருப்பினும், இதுதொடர்பான அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.


