News June 19, 2024
சீமான் கட்சிக்கு பாஜக குறி?

மக்களவைத் தேர்தலில், தமிழ்நாட்டில் கூட்டணி அமைத்து போட்டியிட்டும் பாஜகவால் ஓரிடத்தில் கூட வெற்றி பெற முடியவில்லை. எனினும், தனித்து போட்டியிட்டு சீமானின் நாதக குறிப்பிட்ட வாக்குகளை பெற்றுள்ளது. இதை தெரிந்து கொண்ட பாஜக மேலிடம், நாதகவை கூட்டணிக்குள் கொண்டு வர வாய்ப்புள்ளதா என யோசித்து வருவதாகவும், விரைவில் இதற்கான முயற்சியை அக்கட்சியின் மேலிடம் மேற்கொள்ளக்கூடும் என்றும் கூறப்படுகிறது.
Similar News
News March 22, 2026
கரூர் பிரசாரத்தில் விஜய் ஷூட்டிங்கா? ஆதவ் பரபரப்பு

கரூர் பிரசார கூட்டத்தில் விஜய், ஜன நாயகன் பட ஷூட்டிங் நடத்தியதாகவும், அது தொடர்பாக CBI அவரிடம் கேள்வி எழுப்பியதாகவும் SM-ல் வீடியோ ஒன்று பரவி வருகிறது. இது தொடர்பாக ஆதவ் அர்ஜுனா மெளனம் களைத்துள்ளார். RK நகரில் பேசிய அவர், அதிமுகவுடன் கூட்டணிக்கு செல்லவில்லை என்றவுடன் கொடூரமான மனநிலையில் இப்படி ஒரு பிரசாரத்தை உருவாக்குகின்றனர். எனக் குற்றம்சாட்டினார். இந்த விவகாரத்தில் உங்கள் கருத்து என்ன?
News March 22, 2026
Voter ID-யில் எழுத்துப்பிழை இருந்தாலும் வாக்களிக்கலாம்

வாக்காளர் புகைப்பட அடையாள அட்டையில் எழுத்துப்பிழை (அ) அச்சுப்பிழை இருப்பின், அதை பொருட்படுத்தாது வாக்களிக்க அனுமதிக்கப்பட வேண்டும் என ECI தெரிவித்துள்ளது. அதேபோல், வாக்காளர் அட்டையில் உள்ள வாக்காளர்களின் போட்டோ நிகழ்காலத்தில் பொருந்தாமல் இருப்பின், ECI குறிப்பிட்டுள்ள <<19404034>>12 ஆவணங்களில்<<>> ஒன்றை காண்பித்து வாக்களிக்க அனுமதிக்கப்படுவர். ஷேர் பண்ணுங்க.
News March 22, 2026
திமுகவா, பாஜகவா? அடிமையாக்குவது யார்?

கூட்டணிக்கு தலைமை தாங்கும் கட்சிகள் சிறிய கட்சிகளை பெரியண்ணன் மனநிலையில் அணுகுவதாக விமர்சனம் எழுந்துள்ளது. அதிமுகவை அடிமையாக்கி டெல்லியிலிருந்து இயக்குவதாக திமுக விமர்சனம் செய்து வருகிறது. விசிக, சிபிஎம், சிபிஐ, தவாகவுக்கு தொகுதிகளை குறைத்து திமுக அதே மனநிலையில் பார்க்கிறது என நெட்டிசன்கள் பதிவிட்டு வருகின்றனர். தங்கள் உழைப்பை மதிக்கவில்லை என விசிகவினர் SM-ல் வெளிப்படையாகவே பதிவிட்டு வருகின்றனர்.


