News June 19, 2024

ஓர்பால் திருமணத்தை அங்கீகரித்தது தாய்லாந்து

image

திருமண சமத்துவ மசோதா நேற்று தாய்லாந்து நாடாளுமன்றத்தில் சட்டமாக நிறைவேற்றப்பட்டது. இதன்மூலம், ஓர்பால் திருமணத்தை அங்கீகரித்த முதல் தெற்காசிய நாடு என்ற பெருமையை தாய்லாந்து பெற்றுள்ளது. “இறுதியில் காதல் வென்றது” என்று நாடாளுமன்றத்தில் எம்.பி. ஒருவர் பேசியது கவனத்தை ஈர்த்தது. இச்சட்டம் நிறைவேறியதைத் தொடர்ந்து, அந்நாட்டு ஓர்பால் ஈர்ப்பாளர்கள் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.

Similar News

News September 11, 2025

மீண்டும் சரிந்த சந்தைகள்.. முதலீட்டாளர்கள் கலக்கம்!

image

இந்தியப் பங்குச்சந்தைகள் இன்று(செப்.11) சரிவுடன் வர்த்தகத்தை தொடங்கியுள்ளன. சென்செக்ஸ் 207 புள்ளிகள் சரிந்து 81,217 புள்ளிகளிலும், நிஃப்டி 27 புள்ளிகள் சரிந்து 24,945 புள்ளிகளிலும் வர்த்தகமாகின்றன. ICICI Bank, Dr Reddys Labs, Hero Motocorp உள்ளிட்ட முக்கிய நிறுவங்களின் பங்குகள் சரிவைக் கண்டுள்ளன.

News September 11, 2025

7 ஆண்டுகளுக்கு பிறகு ஆட்ட நாயகன்: குல்தீப் கம்பேக்

image

ஆசிய கோப்பை தொடரில், தனது முதல் போட்டியை இந்தியா அதிரடியாக துவங்கியுள்ளது. குறிப்பாக, 4 விக்கெட்டுகளை வீழ்த்தி குல்தீப் யாதவ் மிரட்டிவிட்டார். 7 ஆண்டுகளுக்கு பிறகு டி20 மேட்ச்சில் ஆட்ட நாயகன் விருதையும் அவர் வென்றார். எனவே, அவர் மீண்டும் ஃபார்முக்கு வந்துவிட்டதாக ரசிகர்கள் கூறுகின்றனர். ஆனால், இங்கி.,க்கு எதிரான தொடரில் விளையாடிய இந்திய அணியில் அவர் இடம்பெறவில்லை. நீங்க என்ன நினைக்கிறீங்க?

News September 11, 2025

மூலிகை: இது தெரிஞ்சா, துத்தி இலையை அள்ளி சாப்பிடுவீங்க!

image

சித்த மருத்துவர்களின் அறிவுரையின்படி,
*துத்தி இலைகளை பச்சையாக சாப்பிட்டால் தசைகளை வலுப்பெறும்.
*துத்தி இலையை தண்ணீரில் கொதிக்க வைத்து, வாய் கொப்பளித்தால் ஈறுகளின் ரத்தப்போக்கு நீங்கும்.
*துத்தி இலைகளை நெய்யில் சாதத்துடன் சேர்த்து, 40- 120 நாட்கள் சாப்பிட்டால், வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.
*துத்தி பூக்களை உலர்த்தி, நீரில் கலந்து குடித்து வந்தால் விந்தணு உற்பத்தியை அதிகரிக்கும். SHARE IT.

error: Content is protected !!