News June 19, 2024
போக்சோ இணையதளம் தொடங்கிய அரசு

பாலியல் குற்றங்களால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு உதவ www.pocsoportal.tn.gov.in என்ற தளமும், கைம்பெண், ஆதரவற்ற மகளிர் நல வாரிய உறுப்பினர் சேர்கைக்கான www.tnwidowwelfareboard.tn.gov.in ஆகிய இணையதளங்கள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன. போக்சோ தளம் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் வழக்குகள் காவல்துறையால் பதிவு செய்யப்படுவது முதல் நீதிமன்ற தீர்ப்பு வரை அலுவலர்கள் கண்காணித்து வழக்கை விரைவுப்படுத்த உதவும்.
Similar News
News March 31, 2026
தெரியாத நம்பரில் Wedding Invitation வருகிறதா.. உஷார் !

திடீரென WhatsApp-ல் ஒரு Wedding Invitation. தெரியாத நம்பர் என்றாலும், எவனோ பழைய ஃபிரண்டா இருக்கும் என்ற யோசனையில், அந்த Wedding Invitation-ஐ ஓப்பன் பண்ணி பார்த்தா அவ்ளோதான். போனில் உள்ள தனிநபர் தரவுகள், பணம் என அனைத்தையும் அபேஸ் பண்ணி விடுகிறார்கள். ஸ்மார்ட்போன் மூலம் நடக்கும் புதிய திருட்டு இது. உ.பி.,யில் இவ்வாறு மெசேஜ் அனுப்பி 15 பேர் ஏமாற்றப்பட்டுள்ளார்கள். உஷாராக இருங்க மக்களே!
News March 31, 2026
திமுகவுடன் இணைந்தார்.. கடைசி நேரத்தில் அறிவித்தார்

TN வளர்ச்சி, மக்கள் நலத் திட்டங்கள் தொடர, திமுகவுக்கு ஆதரவாக மக்கள் விடுதலை கட்சி வாக்கு சேகரிக்கும் என அக்கட்சியின் நிறுவனர் முருகவேல் ராஜன் கூறியுள்ளார். ராமதாஸால் அரசியலுக்குள் வந்த இவர், வந்தவாசியின் MLA-ஆக இருந்திருக்கிறார். பின்னர், 2002-ல் பாமகவில் இருந்து விலகி, மக்கள் விடுதலை கட்சியை நிறுவினார். 2021-ல் திமுக கூட்டணியில் இடம்பெற்று, நிலக்கோட்டையில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டார்.
News March 31, 2026
விசித்திரமான கூட்டணிக்கு தோல்வி உறுதி: அண்ணாமலை

புதுச்சேரியில் ஒழுக்கம் மற்றும் ஒற்றுமை இல்லாத ‘இண்டி’ கூட்டணிக்கு தோல்வி உறுதி என அண்ணாமலை விமர்சனம் செய்துள்ளார். NDA வேட்பாளர்களை ஆதரித்து பரப்புரை செய்வதற்காக புதுச்சேரி சென்ற அவர், ஏர்போர்ட்டில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, 30 தொகுதிகளில் கூட்டணி கட்சியினருக்கு கொடுத்த வாக்குறுதியை காப்பாற்றாத திமுக, காங்., கட்சியினர் எப்படி மக்களுக்கு நல்லது செய்வார்கள் என கேள்வி எழுப்பினார்.


