News June 19, 2024

ரூ.12,700 கோடிக்கு நிகழாண்டு நிதிநிலை அறிக்கை

image

புதுவை சட்டப்பேரவைக் கூட்டத்தில் நிகழாண்டு முழுமையான நிதிநிலை அறிக்கை 12,700 கோடிக்கு தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, தலைமைச் செயலகத்தில் மாநிலத் திட்டக் குழு ஆலோசனைக் கூட்டம் துணைநிலை ஆளுநா் சி.பி.ராதாகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடைபெற்றது. கூட்டத்தில், முதல்வா் ரங்கசாமி, அமைச்சா்கள் நமச்சிவாயம், லட்சுமி நாராயணன், தேனி ஜெயக்குமாா், திருமுருகன், சாய் சரவணன்குமார் மற்றும் பலர் பங்கேற்றனர்.

Similar News

News March 16, 2026

புதுவை: தள்ளுபடியுடன் ரூ.3 லட்சம் கடன்!

image

பெண்களின் சுயதொழில் முன்னேற்றத்திற்காக மத்திய அரசு ‘உத்யோகினி யோஜனா’ திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் வரை கடன் வழங்குகிறது. மளிகை, தையல், அழகு நிலையம் உள்ளிட்ட 88 வகையான தொழில்களுக்கு வழங்கப்படும் இக்கடனில், ரூ.1.5 லட்சத்தை மட்டும் திருப்பிச் செலுத்தினால் போதுமானது. இத்திட்டத்தில் பயன்பெற <>இங்கே<<>> கிளிக் செய்யவும் அல்லது அருகிலுள்ள பொதுத்துறை அல்லது வணிக வங்கிகளை அணுகலாம். இத்தகவலை SHARE பண்ணுங்க!

News March 16, 2026

புதுச்சேரி: 3 நாட்கள் நடந்த சர்வதேச மருத்துவ மாநாடு

image

புதுச்சேரி ஜிப்மரில் (JIPMER) ‘Connaissance – 8th Edition’ என்ற தலைப்பில் 3 நாட்கள் சர்வதேச இளங்கலை மருத்துவ மாணவர்கள் மாநாடு நடைபெற்றது. ரிஷிகேஷ் எய்ம்ஸ் (AIIMS) மருத்துவமனையின் நிர்வாக இயக்குநர் மீனு சிங் தலைமை தாங்கினார். ஜிப்மர் இயக்குநர் வீர்சிங் நேகி வாழ்த்திப் பேசினார். இதில் இந்தியா முழுவதும் உள்ள 200 மருத்துவக் கல்லூரிகளில் இருந்து 2500-க்கும் மேற்பட்ட பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.

News March 16, 2026

காரைக்காலில் மதுபான கடைகளுக்கு கட்டுப்பாடு

image

புதுச்சேரி சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டதை அடுத்து நடத்தை விதிமுறை அமலுக்கு வந்துள்ள நிலையில், காரைக்கால் மாவட்டத்தில் மதுக்கடைகள் மற்றும் மதுபானங்கள் எடுத்து செல்ல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. மேலும் கள் கடைகள், சாராயக் கடைகள், மதுபான கடைகள் ஆகியவை தினமும் இரவு 10.00 மணிக்குள் மூடப்பட வேண்டும் என்று காரைக்கால் துணை ஆணையர் பூஜா அறிவித்துள்ளார்.

error: Content is protected !!