News June 19, 2024
கேஸ் இணைப்பு இல்லையா? வீடுகளில் விரைவில் ஆய்வு

தமிழகத்தில் மண்ணெண்ணெய் வாங்கும் 30 லட்சம் ரேஷன் கார்டுதாரர்களின் வீடுகளில் சமையில் கேஸ் இணைப்பு இல்லையா என்பது குறித்து ஆய்வு செய்யுமாறு அதிகாரிகளுக்கு கூட்டுறவுத்துறை உத்தரவிட்டுள்ளது. கேஸ் இணைப்பு இல்லாதவர்களுக்கே மண்ணெண்ணெய் வழங்கப்படுகிறது. இந்நிலையில், மண்ணெண்ணெய் வழங்கும் அளவை குறைத்த மத்திய அரசு, சிலிண்டர் பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள் அதிகரித்துள்ளதாக கூறுவதால், இந்த ஆய்வு நடக்க உள்ளது.
Similar News
News March 24, 2026
நெருக்கடி.. கடந்த கால சிரமங்கள் மீண்டும் ஏற்படுமா?

போர் நெருக்கடியை கோவிட் போல எதிர்கொள்ள வேண்டும் என்ற PM மோடியின் கருத்து கவலையளிக்கிறது. இதனால், மீண்டும் கடினமான காலங்கள் ஏற்படுமா என்ற கேள்வி மக்களை வாட்டி வதைக்கிறது. போர் நீடித்து, வரும் நாட்களில் எரிபொருள் விநியோகம் தடைப்பட்டால் என்னவாகும்? இறக்குமதி & ஏற்றுமதி தடைப்பட்டால் என்னவாகும்? இந்த தாக்கம் விலைவாசி, வேலைவாய்ப்புகளையும் பாதித்தால் நிலைமை என்னவாகும்? நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?
News March 24, 2026
எரிசக்தி இறக்குமதியை விரிவுபடுத்தியுள்ளோம்: PM

நாட்டில் எரிசக்தி விநியோகம் சீராக இருப்பதாக PM மோடி தெரிவித்தார். இந்தியா தனது LPG தேவைகளில் கிட்டத்தட்ட 60%-ஐ இறக்குமதி செய்வதாகவும், கடந்த 11 ஆண்டுகளில் எரிசக்தி இறக்குமதியை 27 நாடுகளில் இருந்து 41 நாடுகளாக விரிவுபடுத்தியுள்ளதாகவும் தெரிவித்தார். மேலும், அவசர காலத்துக்கான பெட்ரோலிய இருப்பு 53 லட்சம் மெட்ரிக் டன் உள்ளதாகவும், அவற்றை 65 லட்சமாக விரிவுப்படுத்த திட்டமிட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.
News March 24, 2026
தேர்தலில் கம்யூனிஸ்ட் கரைந்த கதை

1989 முதல் பெரும்பாலான சட்டப்பேரவை தேர்தல்களில் இரட்டை இலக்கத்தில் களம் கண்ட CPM, தற்போது தொடர்ந்து 2-வது முறையாக ஒற்றை இலக்கத்தில் போட்டியிடுகிறது. 1989-21( திமுக+), 1991-22(திமுக+), 1996-40(மதிமுக+), 2001-8(அதிமுக+), 2006-13(திமுக+), 2011-12(அதிமுக+), 2016-25( மக்கள் நலக்கூட்டணி), 2021-6(திமுக+), 2026-5(திமுக+). கடந்த தேர்தலை விட இம்முறை ஒரு சீட் குறைக்கப்பட்டது பற்றி உங்க கருத்து?


