News June 19, 2024
இன்றைய தலைப்புச் செய்திகள்!

*நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்ற முழக்கத்திற்கு ஆதரவு தருகிறோம் – DK சிவகுமார்
*மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதும் வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் – கனிமொழி
*அர்ஜென்டினாவில் லித்தியம் இருப்பு குறித்து கோல் இந்தியா ஆய்வு மேற்கொள்ள உள்ளது.
*T20 WC சூப்பர் 8 சுற்றின் முதலாவது ஆட்டத்தில் SA – USA அணிகள் இன்று மோதவுள்ளன.
*ரஃபா நகரில் 50% ஹமாஸ் ஆயுதக்குழுவினரை வீழ்த்திவிட்டோம் – இஸ்ரேல்
Similar News
News March 13, 2026
எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை: ஃபரூக்

தன்னை துப்பாக்கியால் சுட்டு கொல்ல முயன்ற நபர் குறித்து தனக்கு எதுவும் தெரியாது என மயிரிழையில் உயிர்தப்பிய ஜம்மு காஷ்மீர் Ex CM ஃபரூக் அப்துல்லா தெரிவித்தார். இச்சம்பவத்திற்கு பின்னர் அமித் ஷா போனில் தன்னை தொடர்புகொண்டு விசாரித்ததாக கூறினார். தற்போது நாட்டில் நிலவும் வெறுப்பு பிரசாரத்தால் இதுபோன்று தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், எந்த மதமும் வெறுப்பை கற்பிக்கவில்லை எனவும் அவர் சுட்டிக்காட்டினார்.
News March 13, 2026
அப்துல் கலாம் பொன்மொழிகள்

*கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் ஒன்று அல்ல, கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் செய்வது. *சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும். *வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தால், தோல்வி ஒருபோதும் வெல்லாது. *பெரிய கனவு காண்பவர்களின் பெரிய கனவுகள் எப்போதும் உயர்ந்த நிலையை அடையும். *வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!
News March 13, 2026
கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டாரா?

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய உயர் தலைவராக மொஜ்தபா கமேனி பொறுப்பெற்ற நிலையில் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரானின் ‘ஃபார்ஸ்’ ஊடகம், அவருடன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.


