News June 19, 2024
நீட் வினாத்தாள் கசிவு: கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்

நீட் தேர்வில் மிகச்சிறிய தவறு நடந்திருந்தாலும், கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது. நீட் வினாத்தாள் கசிவு குறித்த மனுவை விடுமுறை காலச் சிறப்பு அமர்வு விசாரித்தது. இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிமன்றம், தேர்வு முகமையும் மத்திய அரசும் உரிய நேரத்தில் உறுதியான நடவடிக்கைகளை எடுக்க அறிவுறுத்தியதோடு, தங்கள் பதில்களை புதிதாக தாக்கல் செய்ய வேண்டும் என்று உத்தரவிட்டது.
Similar News
News March 24, 2026
தமிழக தேர்தலில் எல்.முருகன் போட்டியா?

மத்திய இணையமைச்சர் எல்,முருகன், 2026 தேர்தலில் போட்டியிடவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கோவை அவிநாசி, மேட்டுப்பாளையம் ஆகிய தொகுதிகளை பாஜக தலைமையிடம் விருப்பமாக கோரியுள்ளதாகவும் கூறப்படுகிறது. கடந்த தேர்தலில் தாராபுரம் தொகுதியில் போட்டியிட்ட அவர் தோல்வியடைந்தார். மத்திய அரசியலில் இருந்து மாநில அரசியலுக்கு அவர் திரும்புவதாக வெளியான தகவல் கவனம் பெற்றுள்ளது.
News March 24, 2026
BREAKING: மகளிருக்கு ஃபிரிட்ஜ் இலவசம்.. வாக்குறுதி

சட்டமன்ற தேர்தலுக்கான அதிமுகவின் முழு தேர்தல் அறிக்கையை EPS வெளியிட்டார். அதிமுக ஆட்சிக்கு வந்தால் ஃபிரிட்ஜ் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். அறிக்கையின் அம்சங்கள்: மகளிருக்கு மாதம் ₹2,000, அனைத்து குடும்பத்திற்கும் ₹10,000, ஆண்களுக்கும் நகர பஸ்களில் இலவச பயணம், மானிய விலையில் டூவீலர், முதியோர் உதவித் தொகை ₹2,000, கல்விக் கடன் தள்ளுபடி, 3 சிலிண்டர் இலவசம் ஆகியவை அதில் இடம்பெற்றுள்ளன.
News March 24, 2026
பெரிய லாபத்தில் முடிந்த சந்தைகள்!

பங்குச்சந்தைகள் நல்ல உயர்வுடன் இன்று வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. சென்செக்ஸ் 1,372 புள்ளிகள் உயர்ந்து 74,068 புள்ளிகளிலும், நிஃப்டி 399 புள்ளிகள் உயர்ந்து 22,912 புள்ளிகளிலும் வர்த்தகத்தை நிறைவு செய்தன. குறிப்பாக Eternal, Larsen, Asian Paints உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் 5% வரை உயர்ந்தன. நேற்று பெரிய வீழ்ச்சியடைந்த நிலையில், இன்று கண்ட ஏற்றம் பலருக்கு நல்ல லாபத்தை கொடுத்துள்ளது.


