News June 19, 2024
தங்கம் வென்றார் நீரஜ் சோப்ரா

பாவோ நுர்மி தடகள போட்டியில் இந்தியாவின் ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா தங்கம் வென்றுள்ளார். பின்லாந்தில் சர்வதேச தடகள போட்டிகள் நடைபெற்று வருகின்றன. அதன் ஈட்டி எறிதல் இறுதிப்போட்டியில், ஜெர்மனி உள்ளிட்ட 8 நாடுகளைச் சேர்ந்த வீரர்கள் பங்கேற்றனர். இதில் 85.97 மீ., தூரம் ஈட்டியை எறிந்த நீரஜ் (26) முதலிடம் பிடித்து, தங்கத்தைக் கைப்பற்றினார். டோனி, ஆலிவர் ஆகியோர் அடுத்தடுத்த இடங்களைப் பிடித்தனர்.
Similar News
News November 14, 2025
VIRAL: ராகுல் காந்தியின் ‘95 தேர்தல் தோல்விகள்’

காங்கிரஸின் தோல்வியை கலாய்த்து பாஜக ஐடி விங் வெளியிட்ட X பதிவு வைரலாகி வருகிறது. காங்கிரஸில் முக்கிய தலைவராக ராகுல் உருவெடுத்த 2005 முதல் 2025 வரையான 20 ஆண்டுகளில், அக்கட்சியின் அனைத்து தேர்தல் தோல்விகள் & பின்னடைவுகளை குறிப்பிட்டு, ‘ராகுல் காந்தி! இன்னொரு தேர்தல், இன்னொரு தோல்வி!’ எனக் குறிப்பிட்டு, தேர்தலில் தோற்பதில் இவரது consistency-ஐ யாருமே மிஞ்ச முடியாது என்று கிண்டல் செய்துள்ளது.
News November 14, 2025
BIHAR ELECTION: தேஜ் பிரதாப் யாதவ் தோல்வி

பிஹார் சட்டப்பேரவை தேர்தலில், லாலு பிரசாத் யாதவின் மூத்த மகன் தேஜ் பிரதாப் யாதவ் தோல்வியடைந்தார். மஹுவா தொகுதியில் தனது ஜன்ஷக்தி ஜனதா தள கட்சியின் சார்பாக போட்டியிட்ட அவர், LJP(R) வேட்பாளர் சஞ்சய் குமாரிடம் 51,000 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்து 3-ம் இடம் பிடித்தார். ஆர்ஜேடி கட்சியின் முகேஷ் ரோஷன் இரண்டாம் இடம் பிடித்தார்.
News November 14, 2025
CINEMA ROUNDUP: ‘காந்தாரா’ வில்லன் தமிழில் அறிமுகம்

* ‘காந்தாரா சாப்டர் 1’ வில்லன் குல்ஷன் தேவய்யா, ‘லெகசி’ என்ற தமிழ் வெப் சீரிஸில் நடிக்க உள்ளார் *மம்மூட்டி நடித்துள்ள ‘களம்காவல்’ படத்தின் டிரெய்லர் வெளியாகியுள்ளது. *ஸ்ரீகாளஹஸ்தி கோவிலில் பிரசன்னா-சினேகா சாமி தரிசனம் செய்தனர். *அர்ஜூன் நடித்துள்ள ‘தீயவர் குலை நடுங்க’ படத்தின் டிரெய்லர் கவனம் ஈர்த்துள்ளது. * ‘Non Violence’ படத்திலிருந்து ஸ்ரேயா நடனமாடியுள்ள பாடலின் லிரிக்கல் வீடியோ வெளியிட்டது.


