News June 18, 2024
பணக் கடலில் மிதக்கப் போகும் ராசிகள்

மகிழ்ச்சி, செல்வத்தை வாரி வழங்கும் சுக்கிர பகவான் ஆர்த்ரா நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இதன் காரணமாக சிம்மம், துலாம், தனுசு, மகர ராசியினர் மகிழ்ச்சிக் கடலிலும், பண வெள்ளத்திலும் மிதக்கப் போகின்றனர். எதிர்பாராத பணவரவு, நிலுவையில் இருந்த வழக்குகள் சாதகமாக முடிவது, சரிவில் இருந்த தொழிலில் லாபம், வேலை இல்லாதோருக்கு தேடி வரும் வேலை போன்ற பல்வேறு சுப பலன்களை மேற்கண்ட ராசியினர் அனுபவிக்க உள்ளனர்.
Similar News
News March 24, 2026
முதல்வருக்கு எதிராக களமிறங்கும் EX முதல்வர்!

புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமியை எதிர்த்து EX முதல்வரும், காங்., MP-யுமான வைத்திலிங்கம் நேரடியாக களமிறங்குவது அரசியல் களத்தை சூடாக்கியுள்ளது. ரங்கசாமி, நாராயணசாமி, வைத்திலிங்கம் போன்ற முக்கிய தலைவர்கள், சம பலம் கொண்ட தலைவர்களுடன் போட்டிப் போடுவதை தவிர்த்து வந்தனர். ஏனென்றால் யாரேனும் ஒருவரது தோல்வி பேசுபொருளாகும். ஆனால், இம்முறை தட்டாஞ்சாவடி தொகுதியில் இருவரும் நேரடியாக மல்லுகட்டுகின்றனர்.
News March 24, 2026
டாஸ்மாக் கடைகளில் புதிய மாற்றம்.. அறிவிப்பு வந்தது

சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, டாஸ்மாக் கடைகளில் மதுபானங்களை விற்பனை செய்ய திடீரென்று கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளது. அதன்படி, ஒருவருக்கு ஒரு ரசீதில் 25 குவார்ட்டர் அல்லது 12 ஹாப் அல்லது 6 புல் பாட்டில் மது வகைகள், 12 பீர் பாட்டில்கள், 9 லிட்டர் ஒயின் மட்டுமே விற்பனை செய்ய வேண்டும்; இதை டாஸ்மாக் கடை பணியாளர்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
News March 24, 2026
சர்ச்சையில் சிக்கியது ‘யூத்’ படம்

கென் கருணாஸ் இயக்கி நடித்த ’யூத்’ தான் தற்போது Talk of the town. இந்த படத்தை அனைவரும் கொண்டாடி வரும் நிலையில், தற்போது ஒரு சர்ச்சை கிளம்பியுள்ளது. படத்தில் ‘ஆசபட்ட பொண்ணு பேரு மோனிஷா’ என்ற 12 வருட பழைய பாடலை கென் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் இதனை உருவாக்கிய கானா பாடகர் தினேஷிடம் அவர் அனுமதி பெறவில்லையாம். இதனால், தான் மிகுந்த மன வருத்தத்தில் இருப்பதாக தினேஷ் கூறியுள்ளார்.


