News June 18, 2024
தேர்தல் புறக்கணிப்பு ராஜதந்திரம்: உதயகுமார்

தோல்வி பயத்தால் விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிடவில்லை என்ற விமர்சனம் எழுந்துள்ளது. இது குறித்து பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார், தோல்வி காணாத இயக்கம் முழு இயக்கமாக வளர்ச்சி பெற முடியாது என்றார். அப்படியிருக்கும் போது, அதிமுகவுக்கு தோல்வி பயம் என்பது உச்சபட்ச உளறலாக பார்ப்பதாகவும், சூழலுக்கு ஏற்ப முடிவெடுப்பது கட்சிகளின் ராஜதந்திரம் எனவும் கூறியுள்ளார்.
Similar News
News March 22, 2026
கூட்டணியில் சுயமரியாதையை இழந்ததா விசிக?

அரசியலில் தங்கள் வளர்ச்சியை முன்னிறுத்தி திமுக கூட்டணியில் 10 சீட்டுகள் கேட்டு விசிக நெருக்கடி கொடுக்கிறது. ஆனால், திமுகவோ 5 (அ) 6 சீட்டுகள் மட்டும்தான் என விடாப்பிடியாக உள்ளதாம். இதனால், தொகுதிப் பங்கீட்டில் இழுபறி நீடிக்கிறது. இந்நிலையில், திருமாவளவன் தனது சுயமரியாதையை இழந்து திமுகவுடன் பயணிப்பதாக அதிமுக, பாஜக விமர்சித்து வருகின்றன. அதற்கு பதிலடியாக விசிக கூடுதல் சீட்டை கேட்டுப் பெறுமா?
News March 21, 2026
கடன் தள்ளுபடி.. வெளியாக போகும் திமுக தேர்தல் அறிக்கை

திமுக தேர்தல் அறிக்கை இன்னும் ஓரிரு நாள்களில் வெளியாகவுள்ளதாக தகவல் கசிந்துள்ளது. அதில், *மாணவர்களின் கல்விக்கடன் நிலுவைத் தொகை தள்ளுபடி *சொந்தமாக ஆட்டோ வாங்குவதற்கு ₹10,000 வரை மானியம் *மகளிருக்கு சிறப்பு உரிமைத்தொகை *சிறு, குறு விவசாயிகளின் கூட்டுறவு வங்கிக் கடன்கள் தள்ளுபடி *நிலமற்ற ஏழைகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா & கான்கிரீட் வீடுகள் உள்ளிட்ட பல அறிவிப்புகள் இடம்பெற வாய்ப்புள்ளதாம்.
News March 21, 2026
அன்புமணிக்கு ஆட்டம் காட்ட தயாரான ராமதாஸ்!

அதிமுக கூட்டணியில் அன்புமணியை வீழ்த்தவே <<19435845>>சசிகலாவுடன் ராமதாஸ்<<>> கைகோர்த்துள்ளதாக பேசப்படுகிறது. குறிப்பாக தருமபுரி, திருப்பத்தூர், விழுப்புரம், கடலூர் மாவட்டங்களில் பாமக(அன்புமணி) வேட்பாளர்களை தோல்வியடைய வைக்கும் நோக்கில், அன்புமணியால் பதவியை இழந்தவர்களுக்கு ராமதாஸ் அழைப்பு விடுத்துள்ளார். பலம் வாய்ந்த வேட்பாளர்களை இறக்கினால் அன்புமணி தரப்புக்கு தலைவலியாக மாற வாய்ப்புள்ளதாம். நீங்க என்ன சொல்றீங்க?


