News June 18, 2024
சட்டம் அனைவருக்கும் சமமா?

சென்னையில் நேற்று கார் மோதியதில், சூர்யா என்பவர் பலியானார். அது தொடர்பாக கைதான ஆந்திர MP பீடா மஸ்தானின் மகள் ஜாமினில் விடுவிக்கப்பட்டுள்ளார். சில நாள்களுக்கு முன், புனேவில் சிறுவன் ஓட்டிய சொகுசு கார் மோதி இருவர் இறந்தபோதும், அவர் கைதாகி உடனடியாக ஜாமினில் விடுவிக்கப்பட்டார். இதனால் சாமானியர்கள், பணக்காரர்கள் என சட்டத்தில் பாகுபாடு காட்டப்படுகிறதா என்ற கேள்வியை மக்கள் முன்வைத்துள்ளனர்.
Similar News
News November 14, 2025
நல்லாட்சிக்கு கிடைத்த வெற்றி: PM மோடி

பிஹார் தேர்தல் வெற்றி நல்லாட்சி மற்றும் வளர்ச்சிக்கு கிடைத்தது என PM மோடி தெரிவித்துள்ளார். பிஹார் மக்களுக்கு தனது மனமாா்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்வதாகவும், மக்களின் தீர்ப்பு மேலும் உறுதியாக சேவையாற்ற உந்துதல் தரும் எனவும் தனது X பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். பிஹாரில் 200 தொகுதிகளுக்கு மேல் NDA கூட்டணி முன்னிலை உள்ளது.
News November 14, 2025
பிஹார் வெற்றி தமிழகத்திலும் தொடரும்: நயினார்

பிஹார் தேர்தல் வெற்றி தமிழகத்திலும் தொடரும் என நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் பாஜக வெற்றிக்கு ECI உதவியதாக காங்கிரஸ் வைக்கும் குற்றச்சாட்டுக்கு அவர் பதிலடி கொடுத்துள்ளார். தேர்தலில் வெற்றிபெற்றால் அமைதியாக இருக்கும் காங்., தோல்வியடைந்தால் மட்டும் ECI-யை குற்றம்சாட்டுவதாகவும் விமர்சித்துள்ளார்.
News November 14, 2025
‘கும்கி 2’ படத்தை வெளியிட HC அனுமதி

பிரபு சாலமன் வாங்கிய கடனுக்காக ‘கும்கி 2’ படத்தை வெளியிட சென்னை HC <<18267148>>இடைக்கால தடை<<>> விதித்திருந்தது. இந்நிலையில் பிரபு சாலமன் படத்தின் இயக்குனர் மட்டுமே, வாங்கிய கடனுக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது என தயாரிப்பாளர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனை ஏற்றுக்கொண்ட HC, ‘கும்கி 2’ படத்தை வெளியிட அனுமதி கொடுத்தது. அதேநேரம் ₹1 கோடியை கோர்ட்டில் செலுத்த பிரபு சாலமனுக்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


