News June 18, 2024
4 தமிழக மீனவர்களுக்கு சிறை – இலங்கை நீதிமன்றம்

எல்லை தாண்டி மீன் பிடித்ததாகக்கூறி, புதுக்கோட்டை மாவட்டம் கோட்டைப்பட்டினம் பகுதியை சேர்ந்த 4 மீனவர்களை இலங்கை கடற்படையினர் கைது செய்தனர். இந்த வழக்கில் மீனவர்களை விசாரணை செய்த நீதிபதி, ஜூலை 2 ஆம் தேதி வரை சிறைக் காவலில் வைக்க உத்தரவிட்டார். அதனடிப்படையில், 4 தமிழக மீனவர்களையும் இலங்கை போலீஸார் யாழ்ப்பாணம் சிறையில் அடைத்தனர்.
Similar News
News September 11, 2025
இராம்நாடு: தவில், நாதஸ்வரம் பயிற்சி பள்ளி சேர்க்கை

ராமேஸ்வரத்தில் உள்ள ராமநாதசுவாமி கோயிலில் தொடங்கி நடத்தப்பட உள்ள தவில் நாதஸ்வரம் பயிற்சி பள்ளியில் மாணவர் சேர்க்கை நடைபெற்று வருகிறது. 3 ஆண்டுகள் பயிற்சி வழங்கப்படும். இதில் 13 வயது முதல் 20 வயது வரை இப்பயிற்சி பள்ளியில் சேர்த்துக்கொள்ள அனுமதிக்கப்படுவர். ஆண், பெண் என ஆகிய இருபாலரும் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். இதில் பயிற்சி பெறும் மாணவர்களுக்கு மாதம் 10 ஆயிரம் ஊக்கதொகையாக வழங்கப்படும்.
News September 11, 2025
ராமநாதபுரம்: பள்ளி வளாகத்தில் கிடந்த தொழிலாளி சடலம்

தொண்டி தெற்கு தெருவை சேர்ந்தவர் ஹைதர்அலி 39. சுமை துாக்கும் தொழிலாளி. அப்பகுதியில் உள்ள ரேஷன் கடை உள்ளது.2 மாடி கொண்ட அந்த கட்டடத்தின் மேல் பகுதியில் இருந்து நேற்று முன்தினம் இரவு 12:00 மணிக்கு ஹைதர்அலி கீழே விழுந்தார். அவரது உடல் ரேஷன் கடை அருகே உள்ள அரசு தொடக்கப்பள்ளி வளாகத்தில் கிடந்தது.அதிகாலையில் அந்த பக்கமாக சென்ற சிலர் உடல் கிடப்பதை பார்த்து போலீசுக்கு தெரிவித்தனர்.
News September 11, 2025
ராமேஸ்வரத்தில் இருந்து காசிக்கு இலவச ஆன்மீக பயணம்

ராமேஸ்வரம் ராமநாத சுவாமி கோவிலிலிருந்து காசி விசுவநாதர் ஆலயத்திற்கு இந்தாண்டு 1.50 கோடி செலவில் அரசு நிதியில் ஆன்மீக பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மொத்தமாக 600 பக்தர்கள் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. இதற்கு 60 முதல் 70 வயதுக்கு உட்பட்டவராகவும், இந்து மதத்தை சார்ந்தவராக இருத்தல் வேண்டும். இதில் பங்கேற்க 1800 425 1757 இலவச எண்ணில் தொடர்பு கொள்ளலாம். தெரிந்தவர்களுக்கு SHARE பண்ணுங்க.