News June 18, 2024
தி.மலை: 12 தாலுக்காக்களில் நாளை ஜமாபந்தி துவக்கம்

திருவண்ணாமலை மாவட்டத்திற்குட்பட்ட 12 தாலுகாக்களில் ஜமாபந்தி நிகழ்ச்சி நாளை (ஜூன் 19) தொடங்குகிறது. நாளை தொடங்கும் இந்நிகழ்ச்சி 28ஆம் தேதி வரை சனி, ஞாயிறு நீங்கலாக நடைபெற உள்ளது. இதில், வருவாய் நிர்வாக கணக்குகள், தணிக்கை, பட்டா மாறுதல், வருவாய் புகார்கள் ஆகியவற்றிற்கு தீர்வு காணப்படும் என மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் தெரிவித்துள்ளார்.
Similar News
News July 6, 2025
தி.மலை பௌர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம்

திருவண்ணாமலையில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாளிக்கும் ஸ்ரீ அண்ணாமலையார் சமேத உண்ணாமலை அம்மன் திருக்கோவிலில் ஆனி மாத பௌர்ணமி கிரிவலம் வரும் ஜூலை 10, வியாழக்கிழமை காலை 2.26 மணிக்கு தொடங்கி ஜூலை 11, வெள்ளிக்கிழமை காலை 3.11 மணிக்கு முடிவடையும் என்று ஸ்ரீ அண்ணாமலையார் திருக்கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
News July 6, 2025
தி.மலை: உள்ளூரில் கிராம உதவியாளர் வேலை

2,299 கிராம உதவியாளர் (Village Assistant) பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளன. 10ஆம் வகுப்பு படித்திருந்தால் போதும், ரூ.11,100-ரூ.35,100 வரை சம்பளம் வழங்கப்படும். செப்.2ஆம் தேதி தேர்வு நடைபெறும். விருப்பம் உள்ளவர்கள் வரும் ஆகஸ்ட் 4ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் தகவல்களுக்கு தி.மலை மாவட்ட வேலைவாய்ப்பு (04175 233 381) தொடர்பு கொள்ளுங்கள். *10th முடித்த நண்பர்களுக்கு பகிருங்கள்* <<16962477>>தொடர்ச்சி<<>>
News July 6, 2025
கிராம உதவியாளர் வேலை மதிப்பெண் விவரம்

சைக்கிள் , பைக் ஓட்டுத் திறனுக்கு 10 மதிப்பெண்கள். வாசிப்பு மற்றும் எழுத தெரிந்தால் 30 மதிப்பெண்கள். வசிப்பிடம் சான்றிதழுக்கு 35 மதிப்பெண்கள். சம்பந்தப்பட்ட கிராமத்தில் அல்லது தாலுகாவிலாவது வசித்திருக்க வேண்டும். நேர்காணல் 15 மதிப்பெண்கள். வருவாய் கோட்டாட்சியர், வட்டாட்சியர், தனி வட்டாட்சியர் நேர்காணல் நடத்துவார்கள் என்று தெரிவிக்கப்பட்டது. 10ஆம் வகுப்பு மதிப்பெண் சான்றிதழ் கட்டாயம். ஷேர் பண்ணுங்க