News June 18, 2024

திருவள்ளூர்: கோவில் உண்டியலை உடைத்து திருட்டு

image

திருவள்ளூர், சின்ன ஈக்காடு பகுதியில் தீப்பாச்சி அம்மன் கிராம தேவதை கோவில் உள்ளது. இந்நிலையில், நேற்று இரவு கோயில் நிர்வாகி மதன் முறைப்படி கோவிலை பூட்டி சென்றுள்ளார். தொடர்ந்து இன்று காலை வந்து பார்த்தபோது கோவிலில் இருந்த உண்டியல் உடைக்கப்பட்டு ரொக்கம் மற்றும் நகைகள் என 1 லட்சம் மதிப்பிலான பொருட்கள் திருடு போனது தெரியவந்தது. இதுகுறித்த புகாரில் புல்லரம்பாக்கம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.

Similar News

News August 30, 2025

திருவள்ளூரில் மரங்களின் மாநாடு

image

நாம் தமிழர் கட்சி சார்பில் இன்று திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அருகே அருங்குளத்தில் மரங்களின் மாநாடு நடைபெற உள்ளது. சமீபத்திய நாட்களாகவே ஆடு மாடுகள் மாநாடு, மேய்ச்சல் நில போராட்டம், கள் எடுக்கும் போராட்டம் என்ற பாதையில் பயணிக்கும் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், இன்று நடக்கவுள்ள மரங்களின் மாநாட்டில் பேச உள்ளார். அதற்கான ஏற்பாடுகளை கட்சியினர் செய்து வருகின்றனர்.

News August 30, 2025

வேன் கவிழ்ந்து விபத்து 12 பேர் காயம்

image

திருத்தணி அருகே தண்டலம் பகுதியில், தனியார் பீர் தொழிற்சாலை ஊழியர்களை ஏற்றிச் சென்ற வேன் கவிழ்ந்து 8 பெண்கள் உட்பட 12 பேர் காயமடைந்தனர். அடிக்கல்பட்டு பேருந்து நிறுத்தம் அருகே, எதிரே வந்த டிராக்டருக்கு வழிவிடும் போது, வேன் திடீரென தலைகீழாக கவிழ்ந்தது. காயமடைந்தோர் கனகம்மாசத்திரம் சுகாதார நிலையம் மற்றும் திருத்தணி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

News August 30, 2025

‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம் நடைபெறும் இடங்கள்

image

திருவள்ளூர் இன்று (ஆக.30) சோழவரம், பொன்னேரி, கும்மிடிப்பூண்டி, எல்லாபுரம், கடம்பத்தூர், ஆரணி ஆகிய பகுதியில் உங்களுடன் ஸ்டாலின் முகாம் நடைபெற உள்ளது. முகாம் நடைபெறும் இடங்களின் முழுமையான விபரங்களை <>இந்த லிங்கை<<>> கிளிக் செய்து தெரிந்து கொள்ளலாம். இந்த முகாமில் மகளிர் உரிமை தொகை, ஓய்வூதியம் போன்ற அரசு சேவைகளில் குறை இருந்தால் மனுவாக அளித்து உடனடியாக பயன்பெறலாம். அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க.

error: Content is protected !!