News June 18, 2024
அரசியலுக்கு வருவது குறித்து ராபர்ட் வதேரா சூசகம்

வயநாடு தொகுதி இடைத்தேர்தலில் பிரியங்கா, காங்கிரஸ் வேட்பாளராக போட்டியிடுவார் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து அவரின் கணவர் ராபர்ட் வதேராவிடம் கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதிலளித்த அவர், பிரியங்கா தேர்தலில் போட்டியிடுவது மகிழ்ச்சி அளிப்பதாகவும், பிரியங்கா எம்பியாக எப்படி செயல்படுகிறார் என்பதை பொறுத்தே, அரசியலுக்கு வருவது குறித்து தான் முடிவு எடுக்க இருப்பதாகவும் தெரிவித்தார்.
Similar News
News March 11, 2026
விஜய்யிடம் இருந்து விலகினார்.. உடனே புதிய கூட்டணி

தவெக கூட்டணிக்கு ஜனநாயக முஸ்லிம் மக்கள் கட்சி 8 மாதங்களுக்கு மேல் ஆதரவு அளித்து வந்தது. இந்நிலையில், தவெக கூட்டணியில் இருந்து விலகிய அக்கட்சியின் தலைவர் எம்.எப்.தமீம், R.S.பாரதியை சந்தித்து திமுக கூட்டணியில் அதிகாரப்பூர்வமாக இணைந்துள்ளார். இதுகுறித்து எம்.எப்.தமீம், கரூர் விவகாரம் முதல் பல்வேறு விவகாரங்களை சுட்டிக்காட்டியும், விஜய் – தவெகவின் செயல்பாடு சரியில்லை எனவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 11, 2026
இன்னும் முடியவில்லையா திமுக – காங்., பஞ்சாயத்து?

திமுக கூட்டணியில் காங்கிரஸுக்கு 28 தொகுதிகள் ஒதுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் காங்கிரஸ் போட்டியிட விரும்பும் தொகுதிகளின் பட்டியல் அறிவாலயத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கிறதாம். அதில், திமுக போட்டியிட விரும்பும் சில தொகுதிகளை, காங்கிரஸும் குறிவைப்பதாக கூறப்படுகிறது. இதனால், காங்கிரசுக்கு தொகுதிகளை ஒதுக்குவதில் சிக்கல் ஏற்படும் சூழல் உருவாகி இருப்பதாக பேசப்படுகிறது.
News March 11, 2026
பலன்களை அள்ளி தரும் சுண்டைக்காய்!

➤சுண்டைக்காய் சாம்பார், காரக்குழம்பு ருசியாக இருப்பது மட்டுமின்றி, உடலுக்கு பல நன்மைகளையும் அளிக்கும். ➤வயிற்றுவலி, உப்புசம், ஏப்பம் போன்ற செரிமானப் பிரச்னைகளை சரிசெய்யும் ஆற்றல் சுண்டைக்காய்க்கு உள்ளதாக அகத்தியர் பாடலில் குறிப்பிடப்பட்டுள்ளது. ➤இதன் வற்றல் சூரணத்தை மோரில் கலந்து பருக, குடலில் உள்ள நல்ல நுண்கிருமிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும் என சித்த மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். SHARE IT.


