News June 18, 2024
8 இடங்களில் அகழாய்வுப் பணியை தொடக்கம்

தமிழ்நாடு தொல்லியல் துறை சார்பில், 2024ஆம் ஆண்டுக்கான அகழாய்வு பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. சிவகங்கை, விருதுநகர், புதுக்கோட்டை உள்பட 8 இடங்களில் மேற்கொள்ளப்பட உள்ள இந்த அகழாய்வுப் பணிகளை முதல்வர் ஸ்டாலின் இன்று காணொலி மூலம் தொடங்கி வைத்தார். பண்டைய கால தமிழர்களின் வாழ்க்கை முறை போன்ற வரலாறுகளை அறிந்துகொள்ளும் முயற்சியாக, தொல்லியல் துறை வல்லுநர்கள் அகழாய்வுப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
Similar News
News March 10, 2026
சிலிண்டர் தட்டுப்பாடு.. தமிழக அரசு ஆலோசனை

USA – இஸ்ரேல் – ஈரான் போர் எதிரொலியாக தமிழகத்தில் நிலவும் சிலிண்டர் தட்டுப்பாட்டை சமாளிக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அந்த வகையில், INDIAN OIL, HP, BP உள்ளிட்ட நிறுவனங்களை சேர்ந்த உயர் அதிகாரிகளுடன் உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி சென்னையில் நாளை ஆலோசனை நடத்தவுள்ளார். சிலிண்டர் விநியோகம், இருப்பு உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்பட உள்ளது.
News March 10, 2026
திமுகவின் டூல் கிட் தான் விஜய்: அர்ஜுன் சம்பத்

விஜய்யை NDA-வில் சேரும்படி பவன் கல்யாண் அறிவுறுத்தியதாக பரவும் தகவலை, வதந்தி என அர்ஜுன் சம்பத் மறுத்துள்ளார். விஜய்யின் தவெக தமிழக கலாசாரத்தை சீரழிக்கும் வேலையில் ஈடுபட்டு வருவதாக அவர் குற்றஞ்சாட்டினார். விஜய் நடந்து போகும் பாதையை, ஒரு இளம்பெண் முத்தமிட்டதாக குறிப்பிட்ட அவர், இது தான் தமிழக கலாசாரமா என கேள்வி எழுப்பினார். மேலும், விஜய்யை திமுகவின் டூல் கிட் என்றும் சாடினார்.
News March 10, 2026
ஈரான் போர்.. ₹70,000 கோடியை இழந்த LIC

ஈரான் போர் காரணமாக LIC பெரும் இழப்பைச் சந்தித்துள்ளது. பிப்ரவரி 27-ல் ₹14.88 லட்சம் கோடியாக இருந்த நிறுவனத்தின் சந்தை மதிப்பு, மார்ச் 9 அன்று ₹14.17 லட்சம் கோடியாக சரிந்தது. மொத்தம் ₹70,105 கோடியை இழந்தது. SBI, HDFC, ICICI வங்கிகளின் பங்குகளில் ஏற்பட்ட சரிவால் LIC ₹15,293 கோடியையும், L&T பங்குகள் சரிவால் ₹7,609 கோடியையும் இழந்தது. இதனால் LIC முதலீட்டாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.


