News June 18, 2024
பணத்தை செலவழிக்க ஆலோசனை தேவை!

பெரும்பாலும் சம்பாதிக்கும் பணம் போதுமானதாக இல்லை என புலம்புபவர்களைதான் பார்த்திருப்போம். ஆனால், பெங்களூருவை சேர்ந்த தம்பதி மாதம் ₹7 லட்சம் சம்பாதிக்கும் நிலையில், அதை எப்படி செலவழிப்பது எனத் தெரியாமல் குழப்பத்தில் இருப்பதாகவும் கூறியுள்ளனர். பணத்தை எப்படி செலவழிப்பது என ஆலோசனை கோரிய அவர்களின் X வலைதள பதிவு வைரலாகி வருகிறது. மாத கடைசியில் வங்கி கணக்கில் ₹3 லட்சம் மீதமிருப்பதாக தெரிவித்துள்ளனர்.
Similar News
News March 21, 2026
இன்றைய நல்ல நேரம்

மார்ச் 21, பங்குனி 7 ▶கிழமை: சனி ▶நல்ல நேரம்:7:30 AM – 8:30 AM & 4:30 PM – 5:30 PM ▶கெளரி நல்ல நேரம்: 10:30 AM – 11:30 AM & 9:30 PM – 10:30 PM ▶ராகு காலம்: 9:00 AM – 10:30 AM ▶எமகண்டம்: 1:30 PM – 3:00 PM
▶குளிகை: 6:00 AM – 7:30 AM ▶திதி: த்ரிதியை ▶பிறை: வளர்பிறை ▶சூலம்: கிழக்கு பரிகாரம்: தயிர்.
News March 21, 2026
டெல்லியில் கருணாநிதி காத்திருக்கவில்லையா? அதிமுக

டெல்லியில் EPS முகாமிட்டதை விமர்சித்த CM ஸ்டாலினுக்கு, அதிமுக ஐடி விங் பதிலடி கொடுத்துள்ளது. 2011-ல் மகள்(கனிமொழி) திகாருக்கு சென்றுவிடுவார் என பதறிப்போய், டெல்லியில் கருணாநிதி தவமாய் காத்திருக்கவில்லையா என அதிமுக கேள்வி எழுப்பியுள்ளது. மேலும், அறிவாலயத்தின் மேல் மாடியில் நடந்த ரெய்டுக்கு பயந்து, கீழ் மாடியில் காங்.,-க்கு 63 தருவதாக பேசியவர் தான் கருணாநிதி எனவும் அதிமுக கூறியுள்ளது.
News March 21, 2026
சம்மரில் சாப்பிடக் கூடாத உணவுகள்

கோடைக்காலத்தில் உடல் சூட்டை ஏற்படுத்தும் உணவுகளை தவிர்க்க நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ▶குறிப்பாக சிவப்பு இறைச்சி சாப்பிடுவது மூளையில் வெப்பத்தை ஏற்படுத்தும். ▶எண்ணெயில் பொறித்த உணவுகள் நீர்ச்சத்து குறைபாட்டை ஏற்படுத்தும். ▶ டீ, காபி குடிப்பது சோர்வு, தலைசுற்றல், வாயு பிரச்னைகளை ஏற்படுத்தும். ▶காரசாரமான மசாலா அதிகம் சேர்த்த உணவுகள் மற்றும் மது அருந்துவதை தவிர்ப்பது நல்லது.


