News June 18, 2024
BREAKING: பள்ளிகளில் 1 -10ஆம் வகுப்பு வரை இனிப்பு பொங்கல்

முக்கிய தலைவர்களின் பிறந்தநாள் அன்று பள்ளிகளில் சர்க்கரைப் பொங்கல் வழங்க வேண்டும் என்று அனைத்து பள்ளிகளுக்கும் பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. கருணாநிதி பிறந்தநாளை முன்னிட்டு பள்ளித்திறப்பு நாளான ஜூன் 10ஆம் தேதி சர்க்கரைப் பொங்கல் வழங்கப்பட்டது. இந்நிலையில், 1-10ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மதிய உணவுடன் இனிப்பு பொங்கல் வழங்க வேண்டும் என புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
Similar News
News September 14, 2025
திமுகவிடம் கூடுதல் சீட் கேட்போம்: CPI

‘ஆட்சியில் பங்கு’ என்ற குரல் ஒருபுறம் ஒலித்துக் கொண்டிருக்க, கூடுதல் சீட்டுகளை ஒதுக்க திமுகவுக்கு, அதன் கூட்டணி கட்சிகள் நெருக்கடி கொடுத்து வருவதாக தகவல் உள்ளது. இந்நிலையில், CPI தரப்பிலும் கூடுதல் சீட்டுகள் கேட்கப்படும் என, அதன் மாநில செயலாளர் மு.வீரபாண்டியன் தெரிவித்துள்ளார். 2021 பேரவைத் தேர்தலில், திமுக கூட்டணியில், 6 இடங்களில் CPI போட்டியிட்டது குறிப்பிடத்தக்கது.
News September 14, 2025
ஜீன்ஸ் பேண்ட் விஷயத்துல இந்த தவற பண்ணாதீங்க..

ஜீன்ஸ் பேண்ட், பல ஆடைகளுடன் சூட் ஆகும் என்பதால் தினமும் இதனை பயன்படுத்துபவர்கள் உண்டு. ஆனால், இதை 1 முறை பயன்படுத்திய உடனேயே துவைக்க போடும் பழக்கம் சிலரிடம் இருக்கிறது. அப்படி செய்ய வேண்டிய அவசியம் இல்லை. ஜீன்ஸை, 4-5 முறை அணிந்த பிறகு துவைத்தாலே போதுமானது என்கிறார்கள். துர்நாற்றம் வீசத் தொடங்கினால் மட்டும் விரைவில் துவைக்கலாம். இப்படி செய்வதால் தண்ணீரும் அதிகம் செலவாகாது.
News September 14, 2025
INDvsPAK போட்டியை யாரும் பாக்காதீங்க..

INDvsPAK போட்டி இன்று நடைபெறும் சூழலில், இப்போட்டியை புறக்கணிக்க வேண்டும் என பஹல்காம் தாக்குதலில் உயிரிழந்தவரின் மனைவி வலியுறுத்தியுள்ளார். டிவியில் கூட இப்போட்டியை பார்க்காதீர்கள் என கூறிய அவர், BCCI-க்கு கொஞ்சமும் கருணை இல்லை என விமர்சித்தார். மேலும், 1- 2 வீரர்களை தவிர, மற்ற இந்திய வீரர்கள் ஏன் எதுவும் பேசவில்லை என்ற கேள்வியை எழுப்பி, அவர்கள் நாட்டிற்காக நின்றிருக்க வேண்டும் எனவும் கூறினார்.