News June 18, 2024

இளைஞர் கடத்தல் – 10 பேர் கும்பலுக்கு வலை

image

தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார் திருநகரி பகுதியை சேர்ந்தவர் ஹர்ஷவர்த்தன்(30). இவர் மதுரவாயல் பகுதி உறவினர் வீட்டில் 2 மாதமாக தங்கியுள்ளார். இந்நிலையில், நேற்று (ஜூன்.17) பூந்தமல்லி அருகே மேட்டுக்குப்பம் சாலையில் ஹர்ஷவர்த்தன் வந்தபோது 10 பேர் கொண்ட கும்பல் அவரை காரில் கடத்திச் சென்றனர். புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிந்து ஹர்ஷவர்த்தனை கடத்திய கும்பலை தேடி வருகின்றனர்.

Similar News

News August 31, 2025

BREAKING: திருவள்ளூர் எம்.பி 3வது நாளாக…. பரபரப்பு

image

மத்தியரசு தமிழகத்திற்கு கல்வி நிதியை வழங்காததை கண்டித்து உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கிய திருவள்ளூர் எம்.பி சசிகாந்த் செந்தில் நேற்று உடல்நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டார். இன்று அவர் மருத்துவமனையிலும் உணவு உண்ண மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார். மத்தியரசு தமிழகத்தை தொடர்ந்து வஞ்சித்து வருவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

News August 31, 2025

திருவள்ளுர்:அதிகாரிகளால் ரூ.12 கோடி வீண்; கலெக்டர் உத்தரவு

image

திருவள்ளுர் மாவட்டத்தில் 14 ஒன்றியங்களில் 526 ஊராட்சிகளுக்கு, 2023 – 24ம் ஆண்டு 86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது. இதில் பல பணிகள் கிடப்பில் போடப்பட்டு இருந்த நிலையில், 12.97 கோடி ரூபாய் பணிகளை கலெக்டர் பிரதாப் ரத்து செய்து, நிதியை திருப்பி அனுப்ப உத்தரவிட்டுள்ளார். அதிகபட்சமாக வில்லிவாக்கத்தில் ரூ.3,32,46,204 திருப்பி அனுப்ப பட உள்ளது.

News August 30, 2025

திருவள்ளூர் இரவு ரோந்து போலீசார் விவரங்கள் வெளியீடு

image

திருவள்ளூர் மாவட்டத்தில் இன்று இரவு 11.00 மணி முதல் காலை 6.00 மணி வரை இரவு ரோந்து பணிக்கு அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். மக்கள் தங்களுக்கு அருகில் உள்ள உங்கள் உட்கோட்ட பகுதியில் ரோந்து பணியில் உள்ள அலுவலர்களை அவசர காலத்திற்கு அழைக்கலாம். இரவு ரோந்து பணியில் ஈடுபடும் அதிகாரிகளின் தொலைபேசி எண்கள் மேலே கொடுக்கப்பட்டுள்ளன.

error: Content is protected !!