News June 18, 2024
வே2நியூஸ் செய்தி எதிரொலி: குத்தாலத்தில் மின்கம்பம் அமைப்பு

குத்தாலம் ஒன்றியம் கடலங்குடி ஊராட்சி கடலங்குடி ரெட்டியார் தெருவில் மின்கம்பம் ஒன்று மிகுந்த அளவில் சிதலமடைந்து காணப்பட்டது. இது தொடர்பான செய்தி வே2நியூஸ் ஆப்பில் கடந்த 16ஆம் தேதி வெளியிடப்பட்டது. அதனைத் தொடர்ந்து இன்று மின்சார வாரியம் மூலம் சிதிலமடைந்த மின்கம்பம் அப்புறப்படுத்தப்பட்டு புதிய மின்கம்பம் நடப்பட்டது.
Similar News
News March 7, 2026
மயிலாடுதுறை: ரயில்வேயில் வேலை- தேர்வு கிடையாது!

ரயில்வே துறையில் காலியாக உள்ள 5349 (Apprentice) பணியிடங்களை நிரப்ப அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதற்கு 10th அல்லது ஐடிஐ படித்திருந்தாலே போதுமானது. பல்வேறு பணிகளுக்கான காலியிடங்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதற்கான எந்த ஒரு தனித் தேர்வும் எழுதத் தேவையில்லை. விருப்பமுள்ளவர்கள் வருகிற மார்ச் 23-ம் தேதிக்குள் <
News March 7, 2026
மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை எச்சரிக்கை!

மயிலாடுதுறை மாவட்ட காவல்துறை சமூக ஊடக பாதுகாப்பு குறித்து பல்வேறு அறிவுறுத்தல்களை வழங்கி உள்ளனர். அதில், பொதுமக்கள் தங்களது தனிப்பட்ட விவரங்களை பொதுவெளியில் பகிர வேண்டாம். உங்களின் OTP, PIN , CVV, வங்கி கணக்கு விவரங்கள் ஆகியவற்றை யாரிடமும் பகிரக்கூடாது என அறிவுறுத்தி உள்ளனர். மேலும் இது போன்ற சைபர் குற்றங்கள் குறித்து 1930 என்ற எண்ணில் தயங்காமல் புகார் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளனர்.
News March 7, 2026
மயிலாடுதுறை: உங்க போனுக்கு தேவை இல்லாத CALL வருகிறதா?

மயிலாடுதுறை மக்களே, உங்கள் போனுக்கு அடிக்கடி கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவை இல்லாத அழைப்புகள் வருகிறதா? இதனை தடுக்க ‘1909’ என்ற எண்ணை தொடர்பு கொண்டு ‘DO NOT DISTURB’ என்ற ஆப்ஷனை தேர்ந்தெடுத்தால் போதும். அதுபோல 1909 என்ற எண்ணுக்கு ‘START 0’ அல்லது ‘START 1’ என SMS அனுப்புவதன் மூலமாகவும் கிரெடிட் கார்டு, லோன் போன்ற தேவையற்ற அழைப்புகளை உங்களால் தடுக்க முடியும். இந்த தகவலை மறக்காம SHARE பண்ணுங்க!


