News June 18, 2024

துப்புரவு பணியாளர் மகள் நகராட்சி கமிஷனராக தேர்வு

image

மன்னார்குடி நகராட்சியில் துப்புரவு பணியாளராக வேலை பார்த்தவர் சேகர். இவர் சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்தார். இவரது மகள் துர்கா தமிழ்நாடு அரசு பணியாளர்கள் குரூப் 2 தேர்வில் மாநில அளவில் ரேங்க் பெற்று நகராட்சி கமிஷனராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த பணி ஆணையை நேற்று மாநில தேர்வாணையத்துறை இயக்குனர் வழங்கினார். இந்நிலையில் தேர்வு பெற்ற துப்புரவு பணியாளரின் மகளான மாணவியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.

Similar News

News August 29, 2025

அரசு தொடக்கபள்ளியில் குறுவள மைய கலை திருவிழா

image

கோட்டூர் ஒன்றியம் விக்கிரபாண்டியம் அரசு தொடக்கப்பள்ளியில் குறுவள மைய அளவிலான கலைத் திருவிழா போட்டிகள்,இன்று நடைபெற்றது இவ்விழாவிற்கு அரசு உயர்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியர் முத்து தலைமையிலும், வட்டார வளமைய ஆசிரியர் பயிற்றுநர் பாபி மற்றும் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் ஞானசேகரன் முன்னிலையிலும் மற்றும் ஏனைய ஆசிரியர்கள் நடுவர்களாக பங்கேற்றனர்.

News August 28, 2025

திருவாரூர்: இலவச சட்ட உதவிகள் வேண்டுமா?

image

திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் இலவச சட்ட உதவி ஆலோசனை மையம் செயல்பட்டு வருகிறது. இங்கு சொத்து தகராறு, குடும்ப பிரச்சனை, பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான குற்றங்கள் போன்ற பல்வேறு வழக்குகளுக்கு வாதாட இலவசமாக வழக்கறிஞர் உதவியை பெற முடியும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட சட்ட ஆலோசனை மையத்தை (04366-226767) தொடர்பு கொள்ளலாம். இதை மறக்காமல் SHARE செய்யவும்!

News August 28, 2025

திருவாரூர்: இலவச வீட்டு மனை வேண்டுமா?

image

தமிழக அரசால் ‘இலவச வீட்டு மனை வழங்கும் திட்டம்’ செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலம் வீடு மற்றும் நிலம் இல்லாதவர்களுக்கு கான்கிரீட் வீடு கட்ட இலவச வீட்டு மனை வழங்கப்படுகிறது. இதற்கு உங்கள் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அல்லது வட்டாட்சியர் அலுவலகத்தில் சென்று விண்ணப்பிக்கலாம். கூடுதல் தகவலுக்கு திருவாரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை (04366-221033) தொடர்பு கொள்ளவும். இதை அனைவருக்கும் SHARE பண்ணவும்!

error: Content is protected !!