News June 18, 2024
நீட் முறைகேட்டை ஏற்க முடியாது: நாராயணசாமி

முறைகேடுகளின் உருவமாக இருக்கும் நீட் தேர்வை அகற்ற வேண்டும் என முன்னாள் மத்திய அமைச்சர் நாராயணசாமி தெரிவித்துள்ளார். நீட் தேர்வில் முறைகேடுகள் நடந்துள்ளதை கல்வியமைச்சரே ஏற்றுக் கொண்டுள்ளதாகக் கூறிய அவர், பிஹார் மற்றும் குஜராத்தில் நீட் தேர்வில் பெரிய அளவில் முறைகேடு நடந்துள்ளதாகக் கூறினார். முன்னதாக, நீட் தேர்வு தொடர்பாக பேசிய கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான், முறைகேடு நடந்ததை ஒப்புக்கொண்டார்.
Similar News
News March 31, 2026
மே.வங்கத்தில் வாக்கு திருட்டு செய்ய சதி: மம்தா பானர்ஜி

மே.வங்கத்தில் FORM 6-ஐ பயன்படுத்தி வெளி ஆள்களை முறைகேடாக வாக்காளர் பட்டியலில் சேர்க்க சதி நடப்பதாக CEC-க்கு CM மம்தா பானர்ஜி கடிதம் எழுதியுள்ளார். மகாராஷ்டிரா, டெல்லியில் நடந்த வாக்கு திருட்டு என்ற மோசமான அரசியலை பாஜக இங்கும் செய்வதாகவும் சாடியுள்ளார். மேலும், 60 லட்சம் நேர்மையான வாக்காளர்களின் மனுக்கள் இன்னும் பரிசீலனை செய்யாமல் முடக்கி வைக்கப்பட்டுள்ளதாகவும் குற்றஞ்சாட்டியுள்ளார்.
News March 31, 2026
தங்கம் விலை ஒரே மாதத்தில் சவரனுக்கு ₹16,000 குறைந்தது

மார்ச் மாதத்தில் மட்டும் தங்கம் விலை சவரனுக்கு ₹16,840 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் ஒரு சவரன் ஆபரணத் தங்கம் ₹1,26,200-க்கு விற்பனையான நிலையில், கடைசி நாளான இன்று ₹1,09,360-க்கு விற்பனையாகிறது. மேற்காசிய போர் பதற்றத்தால் வரும் நாள்களிலும் தங்கம் விலை ஏற்ற இறக்கத்துடனே காணப்படும் என்று நிபுணர்கள் கணித்துள்ளனர்.
News March 31, 2026
அரசியல் தலைவர்களின் Fitness Secret என்ன தெரியுமா?

PM மோடி, ஸ்டாலின், ராகுல், EPS, அண்ணாமலை உள்பட அரசியல் தலைவர்கள் பலர் TN-ல் பம்பரம் போல பிரசாரம் செய்து வருகின்றனர். நாள் முழுக்க இவர்கள் எனர்ஜிடிக்காக இருப்பது எப்படி தெரியுமா? ➤வேலை பளு இருந்தாலும் தினசரி உடற்பயிற்சிக்கான ஒரு மணிநேரத்தை அவர்கள் சமரசம் செய்வதே இல்லை ➤சத்தான உணவை அளவாக சாப்பிடுகின்றனர் ➤விமர்சனங்களை தாங்கும் மன உறுதியை பெற தியானம் செய்கின்றனர். நீங்களும் இத ட்ரை பண்ணி பாருங்க.


