News June 18, 2024
திருச்சி வருகிறார் எடப்பாடி பழனிசாமி!

திருச்சி புறநகர் வடக்கு மாவட்ட கழகச் செயலாளர் பரஞ்சோதி இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில்: நாளை எதிர்க்கட்சி சட்டமன்ற தலைவர் எடப்பாடி பழனிசாமி திருச்சி விமான நிலையம் வருகை தருகிறார். அதனால் தலைமை கழக நிர்வாகிகள், முன்னாள் அமைச்சர்கள், நிர்வாகிகள், செயல்வீரர்கள், தொண்டர்கள் அனைவரும் திரளாக கலந்து கொண்டு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க அழைப்பு விடுத்துள்ளார்.
Similar News
News March 11, 2026
இது தமிழக மக்களுக்கும் குடும்ப ஆட்சிக்குமான போட்டி – நயினார்

NDA பொதுக்கூட்டத்தில் பாஜக தமிழக தலைவர் நயினார் நாகேந்திரன் உரையாற்றினார். அதில், “அண்மையில் நடைபெற்ற திமுக மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் இது தமிழ்நாட்டிற்கும் டெல்லிக்கும் இடையையேயான போட்டி எனக் கூறினார். ஆனால் இது தமிழக மக்களுக்கும் குடும்ப ஆட்சிக்குமான போட்டி எனத் தெரிவித்தார். மேலும் தாய் மாமன் வீட்டு சீர் கொண்டு வருவதைப் போல நலத்திட்டங்களை பிரதமர் மோடி கொண்டு வருகிறார்” எனத் தெரிவித்தார்.
News March 11, 2026
BREAKING: திருச்சி வந்தடைந்தார் பிரதமர் மோடி

கேரளம் மாநிலம் கொச்சியில் இருந்து திருச்சி விமான நிலையத்திற்கு பிரதமர் மோடி வந்துள்ளார். அவருக்கு விமான நிலையத்தில் கூட்டணி கட்சியின் தலைவர்கள், முக்கிய நிர்வாகிகள் சார்பில் பூங்கொத்து வழங்கி உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. மேலும் விமான நிலையத்தில் இருந்து ஹெலிகாப்டர் மூலம் பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்திற்கு செல்ல உள்ளார்.
News March 11, 2026
திருச்சி: TNPSC குரூப்-2 தேர்வு குறித்த அறிவிப்பு

தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் நடத்தும், ஒருங்கிணைந்த குடிமைப் பணிகளுக்கான குரூப்-2 தேர்வு வரும் மார்ச் 15ஆம் தேதி நடைபெற உள்ளது. இத்தேர்வினை திருச்சி மாவட்டத்தில் 1 தேர்வு மையத்தில் முற்பகலில் 356 பேர், பிற்பகலில் 368 பேர் என மொத்தம் 724 எழுத உள்ளனர். மாணவர்கள் தேர்வறைக்குள் செல்போன், ப்ளூடூத் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை எடுத்து வரக்கூடாது என ஆட்சியர் சரவணன் தெரிவித்துள்ளார்.


