News June 18, 2024
குமரி: திடீர் சாரல் மழை.. பொதுமக்கள் உற்சாகம்

கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவிலில் இன்று அதிகாலை முதலே மேகமூட்டத்துடன் காணப்பட்டது. காலை 9:30 முதல் மாவட்டத்தின் பல பகுதிகளில் சாரல் மழை பெய்யத் துவங்கியது. வடகிழக்கு பருவமழை முடிந்து சில நாட்களாக மழை இல்லாமல் இருந்த நிலையில், இன்று மழை பெய்ததால் பொதுமக்களும் விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Similar News
News March 10, 2026
குமரி: HI சொன்னா- உங்க வங்கி விபரங்கள் Whatsapp-ல!

குமரி மக்களே, கீழே உள்ள எண்ணை சேமித்து ‘Hi’ என்று அனுப்பினால் உங்க Account Balance, Statement, Loan info எல்லாம் உங்கள் வாட்ஸ்அப்பில் வந்துவிடும். இனி வங்கிக்கு செல்ல வேண்டாம்!
1. SBI – 90226 90226
2. Canara Bank – 90760 30001
3. Indian Bank – 87544 24242
4. IOB – 96777 11234
5. HDFC – 70700 22222
இந்த பயனுள்ள தகவலை மற்றவர்களும் தெரிஞ்சுக்க ஷேர் செய்யுங்க.
News March 10, 2026
குமரி: ரூ.2.10 கோடி நகை மோசடி

வடசேரியில் உள்ள வங்கியில் போலி நகையை அடகு வைத்து ரூ.2.10 கோடி வரை மோசடி செய்ததாக வங்கியின் நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். வங்கியில் இருந்த நகைகளை அதிகாரிகள் தணிக்கை செய்தபோது சில நகைகள் போலி என தெரிய வந்தது. போலி நகைகள் என தெரிய வந்ததையடுத்து நகை மதிப்பீட்டாளர் ரகுவரன் மீது போலீசில் வங்கி மேலாளர் புகார் அளித்ததன் அடிப்படையில் ரகுவரன் கைது செய்யப்பட்டுள்ளார்.
News March 10, 2026
குமரி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிப்பு.!

கன்னியாகுமரி மாவட்டத்திற்கு இன்று (மார்ச்.10) செவ்வாய்க்கிழமை உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. மண்டைக்காடு பகவதி அம்மன் கோயில் திருவிழாவையொட்டி உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். பொதுத் தேர்வுகள் நடைபெறும் மாணவர்கள் மற்றும் பணியாளர்களுக்கு விடுமுறை பொருந்தாது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. விடுமுறையை ஈடு செய்ய (மார்ச்.14) சனிக்கிழமை வேலை நாள் ஆகும்.


