News June 18, 2024
போட்டியின்றி தேர்வாகும் கவுதம் கம்பீர்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் பணிக்கு கவுதம் கம்பீர் ஒருவர்தான் விண்ணப்பித்திருப்பதால் அவர் போட்டியின்றி தேர்வாகவுள்ளார். அப்பதவியில் இருக்கும் ராகுல் டிராவிடின் பதவிக்காலம் இம்மாதம் முடிவடையவுள்ளது. அதனைத் தொடர்ந்து விண்ணப்பங்களை பெற்ற பிசிசிஐ, கவுதம் கம்பீர் மட்டுமே விண்ணப்பித்திருப்பதாகத் தெரிவித்துள்ளது. அவர் இன்று பிசிசிஐ அதிகாரிகளுடன் நேர்காணலில் பங்கேற்கவுள்ளார்.
Similar News
News March 23, 2026
நீலகிரியில் மக்கள் பெரும் அச்சம்!

நீலகிரி மாவட்டம் தேவர்சோலை பேரூராட்சிக்கு உட்பட்ட கணியம்வயல் பகுதியில், விவசாயி சியா என்பவரது பசு, மர்ம விலங்கு தாக்கியதில் உயிரிழந்தது. இதுகுறித்து தகவலறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பசுவை கொன்றது புலியாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் அப்பகுதி மக்கள் பெரும் அச்சத்தில் உள்ளனர்.
News March 23, 2026
பேரம்பாக்கம்; அதிமுகவில் கொத்தாக இணைந்தனர்!

திருவள்ளூர் மாவட்டம் பேரம்பாக்கம் பகுதியிலிருந்து மாற்று கட்சியை சேர்ந்த உறுப்பினர்கள் 60 கும் மேற்பட்டவர்கள் BV ரமணா முன்னிலையில் அதிமுகவில் இணைந்தனர் . அவர்களை கட்சியின் துண்டுகள் அணிவித்து இன்று (மார்ச்.22)வரவேற்றார்.உடன் இந்நிகழ்வில் அதிமுகவின் நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள் கலந்து கொண்டனர்.
News March 23, 2026
115 வேட்பாளர்களையும் ரீ-செக் செய்யும் தவெக

2 கட்டங்களாக தேர்வு செய்யப்பட்டுள்ள தவெகவின் 115 வேட்பாளர்களுக்கு தலைமை அலுவலகம் மீண்டும் அழைப்பு விடுத்துள்ளது. வேட்புமனு தாக்கலுக்கு தேவையான ஆவணங்களை சரிபார்க்கும் பொருட்டு வேட்பாளர்களுக்கு மனு தாக்கலுக்கு முன்பே அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. வேட்புமனு பிழைகளை சுட்டிக்காட்டி நிராகரித்துவிடக் கூடாது என்பதற்காக இந்த ரீ-செக் செய்யவுள்ளதாக தவெக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


