News June 18, 2024

இடைத்தேர்தலில் போட்டியில்லை: தவெக

image

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியில்லை என்று தமிழக வெற்றிக் கழகப் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த் அறிவித்துள்ளார். மேலும், எந்தவொரு கட்சிக்கும் ஆதரவில்லை என்றும் அவர் கூறியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடைபெறவிருக்கும் சட்டமன்றத் தேர்தல்தான் பிரதான இலக்கு என்றும், அதில் வெற்றிபெற்று மக்கள் பணியாற்றுவோம் என்றும் அவர் அறிக்கையின் வாயிலாக கூறியிருக்கிறார்.

Similar News

News March 18, 2026

தேர்தல் பொது பார்வையாளர் அரியலூர் மாவட்டம் வருகை

image

அரியலூர் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற தொகுதியின் தேர்தல் பொது பார்வையாளர் அரியலூர் மாவட்டத்திற்கு வருகை தந்துள்ளார். மேலும் ஜெயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதிக்கு நியமிக்கப்பட்டுள்ள கைலாஷ் வான்கடே என்பவரை 6385631644 என்ற தொலைபேசியில் தொடர்பு கொள்ளலாம் என்று ஆட்சியரகம் அறிவித்துள்ளது.

News March 18, 2026

வங்கிக் கணக்கில் ₹6,000.. முக்கிய செய்தி வெளியானது

image

PM KISAN திட்டத்தின்கீழ் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு ₹6,000 (₹2,000 வீதம் 3 தவணைகளாக) வழங்கப்பட்டு வருகிறது. இதற்காக தனித்துவ விவசாய அடையாள எண்ணும் அளிக்கப்பட்டு வருகிறது. தற்போது தேர்தல் நடத்தை விதிகள் அமலில் உள்ளதால், விவசாய அடையாள எண் வழங்கும் பணி நிறுத்தப்பட்டுள்ளது. விதிகள் விலக்கிக் கொள்ளப்பட்ட பிறகு மீண்டும் அடையாள எண் வழங்கும் பணிகள் தொடங்கும் என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 18, 2026

BREAKING: தங்கம் விலை தலைகீழாக குறைந்தது

image

சர்வதேச சந்தையில் தங்கம் விலை மிகப்பெரிய அளவில் குறைந்துள்ளது. இன்று காலை 1 அவுன்ஸ் $9 உயர்ந்த நிலையில், மாலையில் $150 குறைந்து $4,851-க்கு விற்பனையாகிறது. அதேபோல், வெள்ளியும் $2.97 குறைந்து $76.95-க்கு விற்பனையாகிறது. இதன் எதிரொலியால், நாளை இந்திய சந்தையில் தங்கம், வெள்ளி விலை வரலாறு காணாத சரிவைச் சந்திக்கும் என நிபுணர்கள் கூறுகின்றனர்.

error: Content is protected !!