News June 18, 2024
இதனால்தான் இடைத்தேர்தலை அதிமுக புறக்கணித்ததா?

விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக போட்டியிட இபிஎஸ் முடிவு செய்திருந்ததாகவும், செலவை முன்னாள் அமைச்சர் ஒருவரை கவனித்து கொள்ள கேட்டதாகவும் அக்கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால் பெரும்தொகையை தன்னால் செலவிட முடியாது, அப்படி செலவிட்டாலும் வெற்றி கிடைக்குமா என உறுதியாக தெரியாது என்பதால் மறுத்து விட்டதாலும், சீனியர்களின் அழுத்தத்தினாலுமே புறக்கணித்ததாகத் தெரிகிறது.
Similar News
News September 10, 2025
குகேஷை திகைக்க வைத்த 16 வயது சிறுவன்

உஸ்பெகிஸ்தானில் நடைபெற்று வரும் கிராண்ட் ஸ்விஸ் செஸ்ஸில், உலகக் சாம்பியனான குகேஷுக்கு 16 வயது சிறுவன் அதிர்ச்சி வைத்தியம் கொடுத்துள்ளார். 5-வது சுற்றில் குகேஷை எதிர்கொண்ட அமெரிக்க வாழ் இந்தியரான அபிமன்யு மிஸ்ரா, 61-வது நகர்வில், அவரை வீழ்த்தினார். இதன்மூலம் மிக இளம் வயதில் உலக சாம்பியனை வீழ்த்திய வீரர் எனும் சாதனையை அபிமன்யு படைத்தார்.
News September 10, 2025
இது தெரிந்தால் நீங்களும் தற்கொலையை தடுக்கலாம்

தற்கொலை எண்ணத்தில் இருப்பவரை காப்பாற்ற முதலில் இந்த அறிகுறிகள் பற்றி உங்களுக்கு தெரிந்திருக்க வேண்டும். ➤தற்கொலை எண்ணம் கொண்டவர்கள் காரணமே இல்லாமல் சிரிப்பர் ➤சரியாக தூங்கவோ, சாப்பிடவோ மாட்டார்கள் ➤நாள்பட்ட மன அழுத்தம் ➤உடைமைகளை கொடுத்துவிடுவர் ➤அதீத மதுபழக்கம் ➤தனிமையில் இருப்பர் ➤எதன் மீதும் ஈடுபாடு இருக்காது. இப்படி யாரேனும் உங்களுக்கு தெரிந்தால் அவருக்கு ஆறுதலாக இருங்கள். SHARE.
News September 10, 2025
வண்ணத்து பூச்சியாய் மின்னும் நடிப்பு ‘அரக்கி’

‘வயசானலும் அழகும் ஸ்டைலும் குறையவில்லை’ என்ற நீலாம்பரியின் டயலாக்கிற்கு பொருத்தமானவர் மஞ்சு வாரியர். மலையாளத்தின் முன்னணி நடிகையான மஞ்சு, தமிழில் தனுஷ் அஜித், ரஜினி, VJS உள்ளிட்டோருடன் நடித்து தமிழிலும் ஒரு கலக்கு கலக்கியுள்ளார். சினிமாவால் கொண்டாடப்படும் அவர், தனது 47-வது பிறந்தநாளையொட்டி, வெளிநாட்டில் வலம் வரும் புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். போட்டோவை பார்த்து எந்த நாடுன்னு சொல்லுங்க.