News June 18, 2024
ராகுல், சிவ்ராஜ் சிங்கால் வீணாகும் மக்கள் வரிப்பணம்?

ராகுல் காந்தி, சிவ்ராஜ் சிங் செளஹான் ராஜினாமா செய்ததால், வயநாடு, புத்னி தொகுதிகளில் விரைவில் இடைத் தேர்தல் நடத்தப்படவுள்ளது. மக்கள் வரிப்பணத்தை நாட்டின் வளர்ச்சி பணிகளுக்கு பயன்படுத்தாமல், அரசியல் காரணங்களுக்காக பதவி விலகும் தொகுதிகளில் இடைத்தேர்தலுக்கு பயன்படுத்தலாமா? அரசியலுக்காக பதவி விலகுவோரிடம் பணம் வசூலித்து தேர்தல் நடத்த வாய்ப்பில்லையா? என வாக்காளர்களிடையே கேள்வி எழுந்துள்ளது.
Similar News
News March 22, 2026
இன்றைய கறிக்கோழி, முட்டை விலை நிலவரம்

நாமக்கல் மண்டலத்தில் இன்றைய (22-03-2026) காலை நிலவரப்படி, கறிக்கோழி பண்ணை கொள்முதல் விலை (உயிருடன்) கிலோ ரூ.136- ஆகவும், முட்டை கோழி கிலோ ரூ.94- ஆகவும் விற்பனையாகி வருகின்றது. அதேபோல், முட்டை விலையைப் பொறுத்தவரையில், ரூ. 4.45-க்கு விற்பனையாகி வருகின்றது. அவற்றின் விலைகளில் எவ்வித மாற்றமும் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கிறதா பாஜக? தமிழிசை

அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக அதிகாரத்தில் பங்கு கேட்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய தமிழிசை, கூட்டணி ஆட்சி பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதேநேரம், தேர்தல் முடிவைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 22, 2026
35 வருடமாக ராமதாஸ் போட்டியிடாதது ஏன்?

ஒருவழியாக புதிதாக கட்சியில் இணைந்த சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துவிட்டார். ஆனால், அவர் போட்டியிடமாட்டார். இப்போது மட்டுமல்ல, 1991-ல் பாமகவை தொடங்கியது முதலே அவர் போட்டியிட்டதில்லை. தான் போட்டியிடமாட்டேன், தனது கட்சியாளர்களை தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இதுவரை ராமதாஸ் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.


