News June 18, 2024
சிவ்ராஜ் சிங் செளஹான் எம்எல்ஏ பதவி ராஜினாமா

மத்திய பிரதேச முன்னாள் முதல்வர் சிவ்ராஜ் சிங் செளஹான் புத்னி சட்டப்பேரவைத் தொகுதியில் வென்று எம்எல்ஏ.வாக இருந்தார். அதே நேரத்தில் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் விதிஷா தொகுதியில் வென்றதால், மோடி தலைமையிலான அமைச்சரவையில் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலத்துறை அமைச்சராக பதவியேற்றார். இதையடுத்து புத்னி எம்எல்ஏ பதவியை அவர் ராஜினாமா செய்வதாக அறிவித்துள்ளார்.
Similar News
News April 2, 2026
தேர்தல் களத்தில் திமுகவுக்கு உள்ள சவால்கள்!

ஸ்டாலின் தலைமையிலான 5 ஆண்டு கால அரசில் பல புதிய திட்டங்கள் அமலுக்கு வந்திருந்தாலும், நிறைவேற்றாத வாக்குறுதிகள் சவால்களாக மாறியுள்ளன. 2021 தேர்தலில் சொன்ன ‘நீட்’ விலக்கு வாக்குறுதி என்னவானது என அதிமுக, தவெக, நாதக கேள்வியெழுப்புகின்றன. *கல்விக்கடன் தள்ளுபடி, *பெட்ரோல் ₹5, டீசல் ₹4 குறைப்பு, *மாதம் ஒருமுறை மின் கட்டணம் கணக்கெடுப்பு போன்ற வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. <<-se>>#TNElection2026<<>>
News April 2, 2026
பணமழை கொட்டும் 4 ராசிகள்

தமிழ் புத்தாண்டான ஏப்.14 அன்று குபேர யோகம் உருவாவதால் 4 ராசிகளுக்கு ஜாக்பாட் அடிக்கப் போகிறதாம். *மேஷம்: நிதிநிலைமை மேம்படும். புதிய தொழில் தொடங்க வாய்ப்பு. *சிம்மம்: நகை, வாகனம் வாங்கும் யோகம் உண்டாகும். *துலாம்: வேலையில் பாராட்டுகளை பெறுவீர்கள். நினைத்த காரியங்களை வெற்றிகரமாக முடிப்பீர்கள். *தனுசு: கடன் தொல்லைகள், திருமண தடைகள் நீங்கும். தொழிலில் அசுர வளர்ச்சி அடைவீர்கள்.
News April 2, 2026
Condoms-க்கும் ஈரான் போருக்கும் என்ன சம்பந்தம் தெரியுமா?

ஈரான் போரால் சமையலறைக்கு வந்த பாதிப்பு, இப்போது உங்கள் படுக்கையறை வரை வந்துவிட்டது. ஆம், காண்டம்ஸ் தயாரிக்க தேவையான அமோனியா, சிலிக்கான் ஆயில், அலுமினியம் போன்ற மூலப் பொருள்கள் வளைகுடா நாடுகளில் இருந்துதான் வருகின்றன. ஹார்முஸ் நீரிணை மூடப்பட்டதால் சுமார் ₹8,000 மதிப்புள்ள இந்திய காண்டம்ஸ் சந்தை பாதிப்புக்கு உள்ளாகியுள்ளது. உற்பத்தியில் பாதிப்பு ஏற்பட்டுள்ளதால் விரைவில் விலை அதிகரிக்க போகிறதாம்.


