News June 18, 2024
கூடுதல் மினி பஸ்களுக்கு அனுமதி வழங்க முடிவு

தமிழகத்தில் மினி பஸ்கள் இயக்க மீண்டும் அனுமதி அளிக்கப்படுவதற்கான புதிய வரைவு திட்ட அறிக்கையை அரசு வெளியிட்டுள்ளது. 1997ல் தொடங்கப்பட்ட இத்திட்டத்திற்கு கடந்த சில ஆண்டுகளாக அனுமதி வழங்கப்படாமல் இருந்தது. இந்நிலையில், தமிழகம் முழுவதும் மீண்டும் மினி பஸ்கள் இயக்குவதற்கு அனுமதி வழங்கப்படுவதுடன், எந்தெந்த வழித்தடங்களில் இயக்குவது என்பது குறித்து RTOக்கள் முடிவு செய்வார்கள் என்றும் கூறப்பட்டுள்ளது.
Similar News
News March 22, 2026
ஆட்சியில் பங்கு கேட்கிறதா பாஜக? தமிழிசை

அதிமுக கூட்டணி ஆட்சி அமைத்தால், பாஜக அதிகாரத்தில் பங்கு கேட்கும் என்று தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து பேசிய தமிழிசை, கூட்டணி ஆட்சி பற்றி தற்போது எந்த கருத்தும் கூற முடியாது என தெரிவித்துள்ளார். அதேநேரம், தேர்தல் முடிவைப் பொறுத்து அது அமையும் என்றும் அவர் மழுப்பலாக பதிலளித்துள்ளார். இது அதிமுக கூட்டணியில் மீண்டும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
News March 22, 2026
35 வருடமாக ராமதாஸ் போட்டியிடாதது ஏன்?

ஒருவழியாக புதிதாக கட்சியில் இணைந்த சசிகலாவுடன் ராமதாஸ் கூட்டணி அமைத்துவிட்டார். ஆனால், அவர் போட்டியிடமாட்டார். இப்போது மட்டுமல்ல, 1991-ல் பாமகவை தொடங்கியது முதலே அவர் போட்டியிட்டதில்லை. தான் போட்டியிடமாட்டேன், தனது கட்சியாளர்களை தேர்தல் அரசியலில் பிரதிநிதித்துவப்படுத்துவேன் என்ற கொள்கை நிலைப்பாட்டில் இதுவரை ராமதாஸ் உள்ளதாக அவரது ஆதரவாளர்கள் கூறுகின்றனர்.
News March 22, 2026
நாளை முதல் உயர்கிறது.. மத்திய அரசு அறிவிப்பு

உள்நாட்டு விமான <<16963935>>கட்டணங்களுக்கான <<>>உச்ச வரம்பை நாளை முதல் நீக்குவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. எரிபொருள் விலையேற்றத்தை காரணம் காட்டி, ஏற்கெனவே சில விமான நிறுவனங்கள் டிக்கெட் விலையை ஏற்றியுள்ளன. தற்போது மத்திய அரசின் இந்த நடவடிக்கையால் விமான டிக்கெட் கட்டணம் பல மடங்கும் உயரும் என தகவல் வெளியாகியுள்ளது. இதனால், விமான பயணிகள் அதிகளவில் பாதிக்கப்பட வாய்ப்பு இருப்பதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.


