News June 18, 2024
NCERT மீது வழக்கு தொடர முடிவு!

+2 அரசியல் பாடப்புத்தகத்தில் இருந்து பாபர் மசூதி பெயர் நீக்கிய விவகாரத்தில், NCERT மீது வழக்கு தொடர இரு ஆசிரியர்கள் முடிவு செய்துள்ளனர். ஆலோசனைக் குழுவில் இருந்த தங்களிடம் இது குறித்து கவுன்சில் கலந்தாலோசிக்கவில்லை என யோகேந்திர யாதவ், சுஹாஸ் ஆகிய இருவரும் குற்றம்சாட்டியுள்ளனர். விற்பனைக்கு வந்துள்ள இந்த புத்தகங்களை திரும்பப் பெறவில்லை என்றால் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படுமெனவும் எச்சரித்துள்ளனர்.
Similar News
News March 22, 2026
தமிழக வளர்ச்சிக்கு திராவிட மாடல் தேவை: CM ஸ்டாலின்

அடுத்த 5 ஆண்டுகளில் துறைவாரியாக தான் நிர்ணயித்துள்ள வளர்ச்சி இலக்குகள் குறித்து CM ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டுள்ளார். அதில், தொழில்துறை சார்பில் 50 லட்சம் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு, ஆதிதிராவிடர் நலத்துறை சார்பில் ஒவ்வொருவருக்கும் வீட்டுமனைப் பட்டா உள்ளிட்ட 14 இலக்குகள் இடம்பெற்றுள்ளன. தமிழகத்தின் வளர்ச்சி முழுமையடைய திராவிட மாடல் அரசு தொடர வேண்டும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
News March 22, 2026
அதிமுகவுக்கு அவல நிலை: OPS

தொகுதிப் பங்கீடு தொடர்பாக அமித்ஷாவை சந்தித்த EPS-ஐ, திமுக நிர்வாகி OPS மறைமுகமாக விமர்சித்துள்ளார். ஜெயலலிதாவின் காலத்தில் டெல்லியில் இருந்து தமிழகம் வந்து தான் கூட்டணி பேசுவார்கள்; தற்போது எல்லோரும் டெல்லி செல்லக் கூடிய ஒரு அவல நிலையை கட்சிக்கு ஏற்படுத்தி உள்ளார்கள் என தெரிவித்துள்ளார். திமுகவில் சேர்வதற்கு முன்பாக OPS பலமுறை டெல்லி சென்று அமித்ஷாவை சந்தித்தது குறிப்பிடத்தக்கது.
News March 22, 2026
ஜார்ஜ் கோட்டையில் விஜய் : செங்கோட்டையன்

தேர்தலில் வெற்றி பெற்று விஜய் புனித ஜார்ஜ் கோட்டையில் தேசிய கொடி ஏற்றுவார் என்று செங்கோட்டையன் பேசியுள்ளார். கோபிசெட்டிபாளையத்தில் நடைபெற்ற தவெக நிர்வாகிகள் கூட்டத்தில் பேசிய அவர், தமிழகத்தில் ஒரு புதிய புத்துணர்ச்சியோடு தூய ஆட்சியை உருவாக்க விஜய் புறப்பட்டுள்ளார்; இன்று தமிழகம் முழுவதும் மக்கள் மனதில் அவர் நிறைந்துள்ள காட்சிகளை பார்க்க முடிகிறது என்று கூறினார்.


