News June 18, 2024
ரஷ்ய அதிபர் புதின் வட கொரியா பயணம்

24 ஆண்டுகள் கழித்து முதல்முறையாக ரஷ்ய அதிபர் புதின் வட கொரியாவுக்கு பயணம் மேற்கொண்டுள்ளார். இரு நாள் அரசு முறைப்பயணமாக வட கொரியா சென்றுள்ள புதின், அந்நாட்டு அதிபர் கிம் ஜொங் உன்-ஐ சந்தித்து பேசவுள்ளார். அத்துடன் அங்கு நடைபெற உள்ள நட்புறவு மாநாட்டில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ளவுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன. இந்த பயணத்தில் முக்கிய ஒப்பந்தம் கையெழுத்தாகலாம் எனக் கூறப்படுகிறது.
Similar News
News March 20, 2026
நானும் 15 வருஷமா கத்திட்டு இருக்கேன்: சீமான்

2026 பேரவைத் தேர்தலுக்கான நாதக தேர்தல் அறிக்கையை சீமான் இன்று வெளியிட்டார். அப்போது பேசிய அவர், ஸ்டாலினுக்கும் EPS-க்கும் வாய்ப்பு கொடுத்து விட்டீர்கள். இந்த சீமானுக்கும் ஒரு வாய்ப்பு கொடுங்கள். நானும் 15 வருடங்களாக கத்திக்கொண்டு இருக்கிறேன் என்று வாக்கு சேகரித்தார். தமிழகத்தில் இருமுனைப் போட்டிதான் என்ற அவர், நாதக ஒருமுனையிலும் மற்ற கட்சிகள் அனைத்தும் இன்னொரு முனையிலும் உள்ளதாக கூறினார்.
News March 20, 2026
குப்புற படுத்து தூங்குறீங்களா? உஷார்!

தூங்கும்போது எந்த position-ல் படுத்து உறங்குவது என்பது இன்றளவும் மில்லியன் டாலர் கேள்வியாகவே உள்ளது. நீங்கள் எப்படி படுத்து உறங்குகிறீர்கள் என்பதை பொறுத்துதான் உங்கள் முதுகெலும்பின் ஆரோக்கியம் அமையுமாம். நேராக படுத்து உறங்குவதுதான் சிறந்தது என்கின்றனர் டாக்டர்கள். குப்புற (அ) ஒருபக்கமாக படுத்து உறங்குவது முதுகெலும்பு பிரச்னைகளுக்கு வழிவகுக்கலாம் என்றும் அவர்கள் எச்சரிக்கின்றனர். SHARE IT.
News March 20, 2026
போரால் அழிவு.. இழப்பீடு கேட்கும் ஈரான்

தங்களது நாட்டில் ஏற்பட்ட அனைத்து சேதங்களுக்கும் UAE-க்கும் பொறுப்பு உள்ளதாக ஈரான் தெரிவித்துள்ளது. ஈரான் மீது தாக்குதல் நடத்த US படைகளுக்கு தனது நிலப்பரப்பை பயன்படுத்த UAE அனுமதித்ததாகவும் குற்றஞ்சாட்டி இருக்கிறது. எனவே, அந்நாடு உரிய இழப்பீட்டை வழங்கவேண்டும் என ஐநா பொதுச் செயலாளருக்கு கடிதம் மூலமாக ஈரான் வலியுறுத்தியுள்ளது.


