News June 18, 2024
தினம் ஒரு திருக்குறள்!

▶குறள் பால்: பொருட்பால் ▶இயல்: அரசியல்
▶அதிகாரம்: ஒற்றாடல் ▶ குறள் எண்: 581
▶குறள்:
ஒற்றும் உரைசான்ற நூலும் இவையிரண்டும்
தெற்றென்க மன்னவன் கண்.
▶பொருள்:
நேர்மையும் ஆற்றலும் கொண்ட ஒற்றரும், வழுவாத நீதியுரைக்கும் அறநூலும் ஓர் அரசின் இரு கண்களாகக் கருதி போற்றிப் பாதுகாக்கப்பட வேண்டும்.
Similar News
News March 31, 2026
வெள்ளி விலை ஒரு மாதத்தில் கிலோ ₹75,000 குறைந்தது

தங்கத்தைப் போல் வெள்ளி விலையும் மார்ச் மாதத்தில் பெரிய அளவில் குறைந்துள்ளது. 1 கிலோ வெள்ளி ₹75,000 குறைந்துள்ளது. மார்ச் 1-ல் 1 கிராம் ₹325, கிலோ ₹3.25 லட்சத்துக்கு விற்பனையை தொடங்கிய வெள்ளி, மாத முடிவில் (மார்ச் 31) 1 கிராம் ₹250, 1 கிலோ ₹2.50 லட்சத்துக்கு விற்பனையாகிறது. இதனால் வெள்ளி நகைப் பிரியர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
News March 31, 2026
விமான எரிபொருள் வரியை குறைக்க வலியுறுத்தல்

மேற்காசிய போர் காரணமாக விமான எரிபொருளின் விலை இரண்டு மடங்காக உயர்ந்துள்ளது. இந்நிலையில், விமான எரிபொருள் மீதான VAT வரியை மாநில அரசுகள் குறைக்குமாறு விமான போக்குவரத்து அமைச்சர் ராம்மோகன் நாயுடு வலியுறுத்தியுள்ளார். டெல்லியில் VAT வரி 25%, மகாராஷ்டிராவில் 18% & தமிழகத்தில் 29% ஆக உள்ளது. இவற்றை குறைத்தால், விமான டிக்கெட்டுகள் மீதான விலையேற்றம் தவிர்க்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
News March 31, 2026
நள்ளிரவு முதல் சுங்கச்சாவடி கட்டணம் உயர்கிறது

இன்று நள்ளிரவு (ஏப்.1) முதல் சுங்கச்சாவடி கட்டண உயர்வு அமலுக்கு வருகிறது. கப்பலூர், நாங்குநேரி, வானகரம், தேனி, பரனூர் உள்ளிட்ட தமிழக தேசிய நெடுஞ்சாலைகளில் அமைந்துள்ள 68 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்படவுள்ளது. சுமார் 3% – 5% வரை சுங்கக் கட்டணம் உயர்த்தப்படும் என கூறப்படுவதால், வாகனங்களுக்கேற்ப ₹5 – ₹100 வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. வாகன ஓட்டிகளுக்கு ஷேர் பண்ணுங்க.


