News June 18, 2024
பேடிஎம் நிறுவனத்திற்கு வலை விரிக்கும் சொமேட்டோ

பேடிஎம் பேங்க் வசதிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்ததை தொடர்ந்து, பேடிஎம் நிறுவனம் கடும் நிதி நெருக்கடியை சந்தித்து வருகிறது. இந்நிலையில், பேடிஎம் நிறுவனத்தின் டிக்கெட் தொழிலை வாங்க, உணவு டெலிவரி நிறுவனமான சொமேட்டோ பேச்சுவார்த்தை நடத்தி வருகிறது. இந்த ஒப்பந்தம் உறுதியானால், அது சொமேட்டோவின் மிகப்பெரிய நகர்வாக கருதப்படும். முன்னதாக, 2020இல் Uber Eatsஐ சொமேட்டோ கையகப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.
Similar News
News September 11, 2025
அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி தினகரன்

EPS பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறும் கருத்துகள் சரிதான் என கூறிய அவர், தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய EPS தான் காரணம் என சாடியுள்ளார். மேலும், செங்கோட்டையன் முயற்சிக்கு தான் முழு ஆதரவாக இருப்பேன் எனவும் மதுரையில் பேட்டியளித்துள்ளார். டிடிவி தினகரனின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?
News September 11, 2025
பாமகவில் அடுத்தது என்ன நடக்கும்?

PMK-வில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியுள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே ECI நடைமுறை படி தானே பாமக தலைவர் என கூறியுள்ளதால், இந்த நீக்கத்தை அவரது தரப்பினர் ஏற்க மறுப்பார்கள். மேலும் கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அதனை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது.
News September 11, 2025
T20 கேப்டன்ஷிப் ரெக்கார்டு: முதல் இடத்தில் SKY!

அதிக வெற்றி சதவிகிதம் கொண்ட இந்திய கேப்டனாக சூர்யகுமார் யாதவ்(82.6% வெற்றி) ரோஹித் சர்மாவை முந்தி முதல் இடத்தை பிடித்துள்ளார். அவரின் தலைமையில் இந்திய அணி 23 T20 போட்டிகளில் விளையாடி, 19 வெற்றி, 4 தோல்விகளை அடைந்துள்ளது. இந்த பட்டியலில் அடுத்தடுத்த இடங்களில் ரோஹித் சர்மா(80.6%), விராட் கோலி(66.7%), ஹர்திக் பாண்டியா(62.5%) மற்றும் தோனி(60.6%) ஆகியோர் உள்ளனர்.