News June 17, 2024

பண மழையில் நனையப் போகும் ராசிகள்

image

குரு பகவான் தற்போது ரோகிணி நட்சத்திரத்தில் நுழைந்துள்ளார். இதனால் 12 ராசிகளுக்கும் தாக்கம் ஏற்பட்டாலும், மேஷம், மிதுனம், கடகம், மகர ராசியினருக்கு பண மழை கொட்டப் போகிறது. குறிப்பாக, அபரிமிதமான பண வரவு, நகை, ஆடம்பர பொருள்கள், வீடு, நிலம் வாங்கும் யோகம், ஊதிய உயர்வு, உயர்ந்த பதவியில் பணி மாறுதல், பெற்றோர், உறவினர்களின் ஆதரவு போன்ற பல்வேறு சுப பலன்கள் மேற்கண்ட ராசியினரை தேடி வரப்போகிறது.

Similar News

News September 11, 2025

திமுகவில் இணைந்த 1 கோடி பேர் ஒன்றாக உறுதிமொழி

image

ஓரணியில் தமிழ்நாடு என்ற பெயரில் வாக்குசாவடிதோறும் 30% வாக்​காளர்​களை கட்சி உறுப்பினர்களாக்கும் திட்​டத்தை திமுக நடத்தி வருகிறது. இதற்காக, கூவி, கூவி ஆட்களை சேர்ப்பதாக திமுக மீது விமர்சனம் வைக்கப்பட்டது. இந்நிலையில், இந்த இயக்கத்தில் ஒரு கோடிக்கும் மேலான குடும்பங்கள் இணைந்துள்ளதாக திமுக தலைவர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். அவர்கள் அனைவரும் செப்.15-ல் உறுதிமொழி ஏற்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

News September 11, 2025

அதிமுக ஆட்சிக்கு வராது: டிடிவி தினகரன்

image

EPS பொதுச்செயலாளராக இருக்கும் வரை அதிமுக ஆட்சிக்கு வராது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். அதிமுக உடைந்து கிடப்பதாக உதயநிதி கூறும் கருத்துகள் சரிதான் என கூறிய அவர், தேர்தல்களில் அதிமுக தொடர்ந்து தோல்வியடைய EPS தான் காரணம் என சாடியுள்ளார். மேலும், செங்கோட்டையன் முயற்சிக்கு தான் முழு ஆதரவாக இருப்பேன் எனவும் மதுரையில் பேட்டியளித்துள்ளார். டிடிவி தினகரனின் பேச்சு குறித்து உங்கள் கருத்து என்ன?

News September 11, 2025

பாமகவில் அடுத்தது என்ன நடக்கும்?

image

PMK-வில் இருந்து அன்புமணியை ராமதாஸ் நீக்கியுள்ள நிலையில், அடுத்தது என்ன நடக்கும் என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கெனவே ECI நடைமுறை படி தானே பாமக தலைவர் என கூறியுள்ளதால், இந்த நீக்கத்தை அவரது தரப்பினர் ஏற்க மறுப்பார்கள். மேலும் கட்சியின் சின்னம், பெயர் தொடர்பான வழக்கு ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ளதால் அதனை உரிமையியல் நீதிமன்றத்திற்கு மாற்ற வாய்ப்புள்ளது.

error: Content is protected !!