News June 17, 2024

உலகில் மழையே பெய்யாத ஒரே ஊர் எது தெரியுமா?

image

ஏமன் நாட்டின் தலைநகர் சனாவில் அல்-ஹுதீப் என்ற கிராமம் உள்ளது. தரை மட்டத்தில் இருந்து சுமார் 3,200 மீட்டர் உயரத்தில் அமைந்துள்ள இந்த கிராமம் எப்போதும் வறட்சியுடன்தான் காணப்படுகிறது. இப்பகுதியில் போதுமான நீர் ஆதாரங்கள் இல்லாததும், மேகங்கள் குவியாத உயரத்தில் கிராமம் அமைந்துள்ளதாலும் மழை பெய்வதில்லை என வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். பொதுவாக, சுமார் 2,000 மீட்டர் உயரத்தில் மேகங்கள் குவியும்.

Similar News

News March 22, 2026

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தில் மேலும் ₹4,000 வந்தாச்சு.. HAPPY

image

PM இன்டர்ன்ஷிப் திட்டத்தின் மாதாந்திர உதவித்தொகை ₹5,000-ல் இருந்து ₹9,000 ஆக உயர்த்தப்பட்டுள்ளதாக மத்திய அரசு அறிவித்துள்ளது. திட்டத்தில் இருந்து 7 ஆயிரத்திற்கும் அதிகமான மாணவர்கள் பாதியில் வெளியேறி நிலையில், உதவித்தொகை அதிகரிக்கப்பட்டுள்ளது. உதவித்தொகை உயர்வு இம்மாதம் முதலே (மார்ச்) அமலுக்கு வந்துள்ளது. மேலும், 21 – 24 வரை மட்டுமே இருந்த வயது வரம்பு 18 – 25 ஆக மாற்றப்படலாம் எனவும் கூறப்படுகிறது.

News March 22, 2026

திமுக வேட்பாளர் நேர்காணலில் பங்கேற்ற அரசு ஊழியர்கள்

image

திமுக சார்பில் ஆத்தூர் தொகுதியில் போட்டியிட உதவி வேளாண் அலுவலர், அரசு பஸ் கண்டக்டர் விருப்ப மனு அளித்து நேர்காணலில் பங்கேற்றுள்ளனர். இதுதொடர்பான போட்டோ வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இதனையடுத்து, அரசு பணியில் உள்ள இருவரும் கட்சி சார்பில் விருப்ப மனு அளித்தது குறித்து உரிய விசாரணை மேற்கொண்டு, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சியினர் வலியுறுத்தியுள்ளனர்.

News March 22, 2026

முட்டை விலை குறைந்தது

image

வளைகுடா நாடுகளில் நிலவும் போர் சூழலால், நாமக்கல்லில் இருந்து ஏற்றுமதியாகும் முட்டைகள் லட்சக்கணக்கில் தேக்கம் அடைந்துள்ளன. இன்று, நாமக்கல்லில் நடைபெற்ற தேசிய முட்டை ஒருங்கிணைப்பு குழு கூட்டத்தில் முட்டை விலையை 20 காசுகள் குறைக்க முடிவெடுக்கப்பட்டது. அதன் கொள்முதல் விலை ₹4.25 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இது பண்ணயாளர்களுக்கு கவலையையும், மக்களுக்கு மகிழ்ச்சியையும் தந்துள்ளது. உங்க ஊரில் முட்டை விலை?

error: Content is protected !!