News June 17, 2024
வசூலில் மாஸ் காட்டும் ‘மகாராஜா’

நித்திலன் சாமிநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடிப்பில் வெளியான ‘மகாராஜா’ 3 நாள்களில் ₹32.6 கோடி வசூலித்துள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. விஜய் சேதுபதியின் 50ஆவது படமாக வெளியான இப்படத்திற்கு பாசிட்டிவ் விமர்சனம் கிடைத்துள்ளது. இதனால் வரும் நாள்களில் படத்தின் வசூல் மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இப்படத்தில் அனுராக் காஷ்யப், மம்தா மோகன்தாஸ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.
Similar News
News March 5, 2026
தவெகவில் அதிரடி மாற்றம்.. விஜய் அறிவிப்பு

தவெகவில் மகளிருக்கான வாய்ப்புகளை விரிவுப்படுத்தும் வகையில் மாநில அளவிலான 11 நிர்வாகிகளை புதிதாக விஜய் நியமித்துள்ளார். அந்த வகையில், கட்சியின் ஒருங்கிணைப்பாளராக ஸ்பூர்த்தி அருண் நியமனம் செய்யப்பட்டுள்ளார். மேலும், 10 இணை ஒருங்கிணைப்பாளர்களும் நியமனம் செய்யப்பட்டுள்ளனர். தவெகவின் மகளிர் படையின் செயல்பாடுகள் மற்ற கட்சிகளுக்கு சிம்ம சொப்பமானமாக விளங்குவதாகவும் அவர் பாராட்டியுள்ளார்.
News March 5, 2026
இந்தியா பைனலுக்கு செல்லாது: பாகிஸ்தான் வீரர்

இங்கிலாந்து அணிக்கு எதிரான அரையிறுதி போட்டியில் இந்திய அணி தோற்கும் என பாக்., Ex வீரர் ரஷீத் லத்தீஃப் கூறியுள்ளது சர்ச்சையாகியுள்ளது. இங்கிலாந்து அணியே இறுதிப்போட்டிக்கு செல்லும் என அவர் கூறியுள்ளார். இத்தொடரில் இங்கிலாந்து அணி கடினமான சூழ்நிலைகளை கண்டுள்ளது என்றும், இந்தியாவை தோற்கடிக்க ஒரே ஒரு இங்கிலாந்து வீரர் சிறப்பாக செயல்பட்டாலே போதும் எனவும் அவர் கூறியுள்ளார்.
News March 5, 2026
தினமும் பாலியல் மிரட்டல் வருகிறது: ஆயிஷா கான்

தன் உடலை பற்றிய கமெண்ட்களே எப்போதும் வருவதால் ஒரு போஸ்ட் போடுவதற்கு கூட யோசிக்கிறேன் என நடிகை ஆயிஷா கான் தெரிவித்துள்ளார். ’துரந்தர்’ படத்தில் நடித்ததன் மூலம் பிரபலமான இவர், தனக்கு ஒவ்வொரு நாளும் பாலியல் வன்கொடுமை மிரட்டல்கள் விடுக்கப்படுவதாக வேதனையுடன் கூறியுள்ளார். எந்த உடை அணிந்தாலும் தவறு என்கிறார்கள்; தான் உடுத்தும் உடையால் யாருக்கு என்ன பிரச்சனை என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.


