News June 17, 2024

திருச்சி முதல் சென்னை வந்தே பாரத் ரயில்

image

தெற்கு ரயில்வேக்கு திருச்சி மக்கள் மீண்டும் ஒரு கோரிக்கையில், திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் தனியாக இயக்கப்படுமா என்ற கேள்வியும் தற்போது எழுந்துள்ளது. திருச்சி மாவட்டத்தில் தமிழகத்தின் தலைநகரான சென்னைக்கு ஏராளமானோர் பயணம் செய்து வருகின்றனர். இவ்வாறு இருக்க திருச்சியில் இருந்து சென்னைக்கு வந்தே பாரத் ரயில் இயக்கப்பட்டால் அது திருச்சி, சென்னை மக்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.

Similar News

News March 14, 2026

திருச்சி: வாழை ஆராய்ச்சி மையத்தில் வேலை வாய்ப்பு

image

திருச்சி தாயனூரில் உள்ள தேசிய வாழை ஆராய்ச்சி மையத்தில், 1 இளநிலை திட்ட உதவியாளர் பணியிடம் நிரப்பப்பட உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் https://nrcb.org.in/nrcbadmin/webfs/vacancy/RN_5_2026.pdf என்ற தளத்தில் விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்த விண்ணப்பங்களை, வரும் 20 ஆம் தேதிக்குள், nrcbrecruitment@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்ப வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

திருச்சி: NIT-யில் காலிப் பணியிடங்கள் அறிவிப்பு

image

திருச்சி மாவட்டம், துவாக்குடி அருகே அமைந்துள்ள என்.ஐ.டி யில் கட்டடக்கலை, வேதியியல் மற்றும் சிவில் இன்ஜினியரிங் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் பேராசிரியர், துணை பேராசிரியர் மற்றும் உதவி பேராசிரியர் பணியிடங்கள் நிரப்பப்பட உள்ளது. தகுதி உள்ள நபர்கள் www.nittrec.samarth.edu.in என்ற இணையதளம் மூலம், வரும் ஏப்.6 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

News March 14, 2026

திருச்சி: 2 லாரிகள் நேருக்கு நேர் மோதி விபத்து

image

சிவகங்கை மாவட்டம் காளையார் கோவிலை சேர்ந்தவர் வீரபாண்டி (75). இவர் லாரியில் தைலமரக்கட்டைகளை ஏற்றிக்கொண்டு சிவகங்கையில் இருந்து மணப்பாறைக்கு வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் வெங்கட் நாயக்கன்பட்டி பிரிவு சாலை அருகே அவர் லாரியை திருப்ப முயன்ற போது, மதுரையில் இருந்து திருச்சி நோக்கி சிமெண்டு கெமிக்கல் ஏற்றிச் சென்ற லாரி, மரக்கட்டைகள் ஏற்றிய லாரி மீது மோதியது. இதில் இரு லாரிகளும் கவிழ்ந்தன.

error: Content is protected !!