News June 17, 2024
புதுச்சேரி முன்னாள் முதல்வர் நாராயணசாமி கேள்வி

புதுச்சேரி முன்னாள் முதலமைச்சர் நாராயணசாமி இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர், ரெஸ்டோ பார்கள் தொடர்பாக கூட்டணியல் உள்ள பாஜக அமைச்சர் சாய் சரவணன்குமார் ஆளுநரிடம் புகார் தெரிவித்துள்ளார். அவர் ஏன் முதல்வருடம் மனு தரவில்லை. முதல்வருக்கும், அமைச்சருக்கும் கருத்து வேறுபாடு உள்ளதா? இனியாவது முதல்வர் பள்ளி, மக்கள் அதிகமுள்ள பகுதிகளில் உள்ள ரெஸ்டோபார்களை மூடுவாரா எனக் கேள்வியெழுப்பியுள்ளார்.
Similar News
News August 6, 2025
புதுவை: இந்தியன் வங்கியில் வேலை-இன்றே கடைசி வாய்ப்பு

புதுவை மக்களே, இந்தியன் வங்கியில் காலியாக உள்ள 1500 அப்ரண்டிஸ் (Apprentice) பணியிடங்களை நிரப்ப கடந்த மாதம் அறிவிப்பு வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில் இதற்கு விண்ணப்பிக்க நாளையே (ஆக.7) கடைசி நாளாகும். ஏதேனும் டிகிரி முடித்த நபர்கள் <
News August 6, 2025
புதுச்சேரி: சட்டப்பேரவையை முற்றுகையிட முயன்ற எம்.எல்.ஏ

உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட கோவிந்தசாலை முடக்கு மாரியம்மன் கோயில் வீதி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் குடிநீரில் கழிவு நீர் கலந்ததால் 10-கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த விவகாரம் குறித்து ஆலோசனை நடத்த அதிகாரிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. ஆனால், அதிகாரிகள் வராததால், சட்டப்பேரவையை எம்.எல்.ஏ நேரு நேற்று முற்றுகையிட முயன்றுள்ளார்.
News August 6, 2025
அரசு மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு தங்க நாணயங்கள்

புதுச்சேரி மாநில முதல்வர் ரங்கசாமியின் பிறந்த நாள் நேற்று கொண்டாடப்பட்டது. அதனை முன்னிட்டு, காரைக்கால் அரசு பொது மருத்துவமனையில் நேற்று பிறக்கும் குழந்தைகளுக்கு நெடுங்காடு கோட்டுச்சேரி தொகுதி எம்எல்ஏ சந்திர பிரியங்க, தமது சொந்த செலவில் தங்க நாணயங்கள் வழங்கி வாழ்த்தினார். இந்த நிகழ்வில் என்.ஆர்.காங்கிரஸ் நிர்வாகிகள் உடன் இருந்தனர்.