News June 17, 2024

விருதுநகர்: 63 ஏட்டுகளுக்கு எஸ்ஐ பதவி உயர்வு

image

தமிழக அரசு போலீஸ் துறையில் 1999இல் இரண்டாம் நிலை போலீசாக பணியில் சேர்ந்து விருதுநகர் மாவட்டத்தில் ஆயுதப்படை போலீஸ் ஸ்டேஷன்களில் ஏட்டுகளாக பணியாற்றியவர்கள் எஸ்எஸ்ஐ பதவி உயர்வுக்காக காத்திருந்தனர். இவர்களுக்கு ஜூன் 1ல் வழங்க வேண்டிய பதவி உயர்வு தேர்தல் நடத்தை விதிமுறைகள் காரணமாக ஒத்திவைக்கப்பட்டது.இந்நிலையில் நேற்று 63 ஏட்டுகளுக்கு பதவி உயர்வு வழங்கி மதுரை டிஐஜி ரம்யா பாரதி உத்தரவிட்டார்.

Similar News

News March 16, 2026

BREAKING விருதுநகர்: எஸ்.பி மாற்றம் – இவர் தான் புதிய எஸ்.பி!

image

விருதுநகர் மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்து வந்த கண்ணனை தேர்தல் ஆணையம் அதிரடியாக இடமாற்றம் செய்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக விருதுநகர் மாவட்டத்தில் பணியாற்றி வந்த இவர் பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். தற்போது புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக ஸ்ரீநாதா நியமிக்கப்பட்டுள்ளார். இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன் விழுப்புரம் எஸ்.பியாக இருந்தது குறிப்பிடத்தக்கது.

News March 16, 2026

தேர்தல் வருகை; கண்காணிப்புக்கு உள்ளாகும் சிவகாசி

image

தமிழகத்தில் சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் அரசியல் கட்சிகளின் பிரச்சாரம் தீவிரமடைய உள்ளது. பிரச்சாரத்தில் முக்கிய தலைவர்கள் வருகையின் போது தொண்டர்கள் சரவெடி பட்டாசுகளை வெடிப்பது வழக்கம். ஆனால் பட்டாசு ஆலைகளில் சரவெடி பட்டாசு தயாரிக்க தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் சட்ட விரோதமாக வீடுகளில் சரவெடி பட்டாசுகள் தயாரிக்க வாய்ப்பு உள்ளதால் கண்காணிப்பை தீவிரப்படுத்த மக்கள் வலியுறுத்தல்.

News March 16, 2026

விருதுநகர் எழுத்தாளருக்கு சாகித்ய அகாடமி விருது

image

2025-ம் ஆண்டிற்கான சாகித்ய அகாடமி விருது அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் அங்கீகரிக்கப்பட்ட 24 மொழிகளுக்கான சாகித்ய அகாடமி விருதுகள் இன்று அறிவிக்கப்பட்ட நிலையில் இதில் தமிழ் சிறுகதையின் தடங்கள் புத்தகத்திற்காக எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு விருது அறிவிக்கப்பட்டுள்ளது. 1954-ஆம் ஆண்டு தூக்துக்குடியில் பிறந்த இவர் சாத்தூர் அருகே நென்மேனி மேட்டுப்பட்டியில் வளர்ந்து பள்ளிப்படிப்பை நிறைவு செய்தார்.

error: Content is protected !!