News June 17, 2024

டார்ஜிலிங் ரயில் விபத்து: புதுச்சேரி கவர்னர் இரங்கல்

image

புதுச்சேரி துணை ஆளுநர் இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில், மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த கஞ்சன்ஜங்கா ரயில் விபத்தை கேள்விப்பட்டு மிகவும் வருத்தம் அடைந்தேன். ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். இதில், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன் எனத் தெரிவித்துள்ளார்.

Similar News

News March 28, 2026

புதுச்சேரி: சிலிண்டர் புக் செய்ய புதிய முறை!

image

இண்டேன் கேஸ் புக்கிங் செய்வதற்கான பழைய தொலைபேசி எண்கள் செயல்பவில்லை என எழுந்த புகார்களைத் தொடர்ந்து, புதிய ‘ஸ்மார்ட் புக்கிங்’ முறையை அறிமுகம் செய்துள்ளது. அதன்படி,
1. வாட்ஸ்அப் மூலம் 7588888824 என்ற எண்ணில் ‘REFILL’ என மெசேஜ் செய்தால் முன்பதிவு.
2. ‘INDIAN OIL ONE’ செயலி மூலம் முன்பதிவு செய்யலாம்.
3. 8454955555 என்ற எண்ணிற்கு மிஸ்டு கால் கொடுப்பதன் மூலம் சிலிண்டர் புக் செய்யலாம். ஷேர் செய்ங்க…

News March 28, 2026

புதுவை: உங்க குழந்தைகளுக்கு மாதம் ரூ.4,000 வேண்டுமா?

image

மத்திய அரசின் ‘மிஷன் வாத்சல்யா’ குழந்தைகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் 1 குடும்பத்திற்கு அதிகபட்சமாக 2 குழந்தைகளுக்கு மாதம் தலா ரூ.4,000 வீதம் 3 வருடத்திற்கு நிதி வழங்கப்படுகிறது. இதற்கு வருமான சான்றிதழ் போதும், பொது சேவை மையம் (CSC) அல்லது குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் அலுவலகத்தில் நேரடியாக விண்ணப்பிக்கலாம். இந்த தகவலை அனைவருக்கும் ஷேர் பண்ணுங்க!

News March 28, 2026

புதுவை: முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராஜினாமா

image

புதுவையில் காங்கிரஸ் கட்சியிலிருந்து முன்னாள் மாநில காங் தலைவர் AV.சுப்பிரமணியன் ராஜினாமா செய்தார். இது குறித்து காங்கிரஸ் மாநிலத் தலைவர் வைத்தியலிங்கத்திற்கு எழுதியுள்ள ராஜினாமா கடிதத்தில், “எனது தனிப்பட்ட காரணங்களுக்காகவும்; தவிர்க்க முடியாத சூழ்நிலை காரணமாகவும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து பொறுப்புகளில் இருந்தும் ராஜினாமா செய்கிறேன்.” என்று குறிப்பிட்டுள்ளார்.

error: Content is protected !!