News June 17, 2024
இந்திய அணியின் பேட்டிங் ஆர்டரை மாற்றக்கூடாது

டி20 உலகக் கோப்பை தொடரில் இந்திய அணி பேட்ஸ்மேன்கள் பெரிதாக சோபிக்காத நிலையில், பேட்டிங் ஆர்டரை மாற்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்நிலையில், ஓப்பனர்களான விராட் கோலி, ரோஹித் ஷர்மாவை மாற்றக் கூடாது என முன்னாள் இந்திய வீரர் வாசிம் ஜாபர் கூறியுள்ளார். இந்த ஆர்டரை மாற்றினால், 3,4வது இடத்தில ஆடும் வீரர்களும் மாற்றப்படுவார் என்பதால் அது குழப்பத்தை ஏற்படுத்தும் எனத் தெரிவித்துள்ளார்.
Similar News
News March 7, 2026
கச்சா எண்ணெய் விவகாரம்.. US-க்கு இந்தியா கொடுத்த பதில்

ரஷ்ய எண்ணெய் இறக்குமதிக்கு அமெரிக்கா விதித்த 30 நாள் காலக்கெடுவை நிராகரித்த இந்தியா, அதற்குத் தகுந்த பதிலடி கொடுத்துள்ளது. தங்களுக்கு யாருடைய அனுமதியும் தேவையில்லை என்றும், தேசத்தின் நலனே முக்கியம் எனவும் மத்திய அரசு திட்டவட்டமாக கூறியுள்ளது. ஹோர்முஸ் ஜலசந்தியில் நிலவும் பதற்றம் காரணமாக, கச்சா எண்ணெய் எங்கு மலிவாக கிடைக்கிறதோ அங்கு வாங்குவோம் என்றும் தெரிவித்துள்ளது.
News March 7, 2026
TN தேர்தல் தேதி.. வெளியானது ALERT

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வரும் மே 10-ம் தேதி நடைபெறும் என்று கூறப்படும் தகவல் உண்மையல்ல என்று அரசின் TN Fact Check தெரிவித்துள்ளது. தற்போதைய தமிழக அரசின் பதவிக்காலம் மே 10-ம் தேதி முடிவடையும் என்று ECI அறிவித்துள்ளது. ஆனால், தேர்தல் தேதி குறித்து அறிவிப்பு எதையும் வெளியிடவில்லை என்றும், இந்த தவறான தகவலை நம்ப வேண்டாமெனவும் TN Fact Check விளக்கம் அளித்துள்ளது.
News March 7, 2026
என் கணவருக்கு நன்றி.. லதா ரஜினிகாந்த்!

மனைவிக்கு கணவரின் ஆதரவு எவ்வளவு முக்கியம் என்பது குறித்து லதா ரஜினிகாந்த் பேசியுள்ளார். சென்னையில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், ஒரு வீட்டில் கணவர் துணை இல்லாமல் ஒரு பெண்ணால் எதையும் சாதிக்க முடியாது. எனது கணவருக்கு தலைவணங்கி நன்றி கூறிக்கொள்கிறேன் என தெரிவித்தார். எனது முயற்சிகள் அனைத்தையும் என்னுடைய கணவருக்கே அர்ப்பணிக்கிறேன் என்று கூறினார்.


