News June 17, 2024

நீலகிரி: ஸ்ட்ராபெர்ரி பழம்  சீசன் தொடக்கம்

image

நீலகிரி மாவட்டத்தில் 500 ஏக்கர் பரப்பளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ள ஸ்ட்ராபெர்ரி பழம் சீசன் தொடங்கி உள்ளது. நீலகிரி ஸ்ட்ராபெரி பழம் மிகுந்த சுவையாக இருப்பதால் நல்ல கிராக்கி நிலவுகிறது. தற்போது ஸ்ட்ராபெரி பழம் அறுவடை தொடங்கி உள்ளது. வியாபாரிகள் சாகுபடி நிலங்களுக்கு வந்து ஒரு கிலோ 
ரூ.300 விலை கொடுத்து வாங்குகின்றனர். இதனால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Similar News

News March 14, 2026

நீலகிரியில் உங்களுக்கு நிலம் இருக்கா? முக்கிய தகவல்!

image

நீலகிரி மக்களே நிலம் வாங்க விற்க உள்ளீர்களா? உங்களுக்கு ஒரு யோசனை நீங்கள் வாங்கும் நிலத்தின் முந்தைய பட்டா மாறுதல் விபரங்களை ஆன்லைனில் பார்க்க எளிய வழி உள்ளது. இங்கு <>கிளிக்<<>> செய்து புல எண் மற்றும் உட்பிரிவு எண்களை உள்ளிட்டு, உரிய கட்டணத்தைச் செலுத்திப் பழைய உரிமையாளர் மாற்றங்கள் குறித்த ஆவணத்தை தாங்களே டவுன்லோட் செய்து போலி பட்டாக்களை கண்டறியலாம். இந்த நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

நீலகிரி: பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000

image

பெண் குழந்தைகளுக்கு ”முதலமைச்சரின் பெண் குழந்தை பாதுகாப்பு திட்டம்” மூலம் கல்வி பயிலும் காலத்தில் நிதி உதவி வழங்கப்படுகிறது. ஒரு குடும்பத்தில் ஒரு பெண் குழந்தை இருந்தால் ரூ.50,000, அதுவே 2 பெண் குழந்தைகள் இருந்தால் தலா ரூ.25,000 வழங்கப்படுகிறது. இதற்கு இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களுக்கு<> கிளிக்<<>> (அ ) மாவட்ட சமூக நல அலுவலத்தை அணுகவும். நல்ல தகவலை அனைவருக்கும் SHARE பண்ணுங்க!

News March 14, 2026

கூடலூர்: மர்ம விலங்கு தாக்கி பசு மாடு பலி

image

கூடலூர் செறுமுள்ளி கிராமம் சர்க்கார் மூலை பகுதியில், வாப்புட்டி என்பவருக்குச் சொந்தமான 4 வயது பசு மாடு கடந்த இரண்டு நாட்களாகக் காணாமல் போனது. இந்நிலையில், நேற்று (13.03.2026) மாலை மர்ம விலங்கு கடித்த நிலையில் அந்தப் பசுவின் உடல் கண்டெடுக்கப்பட்டது. இது குறித்துத் தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

error: Content is protected !!