News June 17, 2024

காஷ்மீர் தாக்குதல் விசாரணை NIAவிடம் ஒப்படைப்பு

image

காஷ்மீரின் ரியாஸி பகுதியில் கடந்த 9ஆம் தேதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் பள்ளத்தில் பேருந்து கவிழ்ந்து 9 யாத்ரீகர்கள் பலியாகினர். மேலும் 33 பேர் காயமடைந்தனர். இந்தத் தாக்குதலில் ஈடுபட்ட தீவிரவாதிகளை தேடும் பணி நடந்து வரும் நிலையில், விசாரணையை தேசிய புலனாய்வு அமைப்பிடம் மத்திய உள்துறை அமைச்சகம் ஒப்படைத்துள்ளது. இதையடுத்து என்ஐஏ புதிய முதல் தகவல் அறிக்கையை பதிவு செய்துள்ளது.

Similar News

News March 13, 2026

அப்துல் கலாம் பொன்மொழிகள்

image

*கனவு என்பது நீங்கள் தூக்கத்தில் காணும் ஒன்று அல்ல, கனவு என்பது உங்களை தூங்கவிடாமல் செய்வது. *சூரியனைப் போல் பிரகாசிக்க விரும்பினால், முதலில் நீங்கள் சூரியனைப் போல் எரிய வேண்டும். *வெற்றி பெற வேண்டும் என்ற உறுதியுடன் இருந்தால், தோல்வி ஒருபோதும் வெல்லாது. *பெரிய கனவு காண்பவர்களின் பெரிய கனவுகள் எப்போதும் உயர்ந்த நிலையை அடையும். *வாய்ப்புக்காக காத்திருக்காதே; வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்!

News March 13, 2026

கமேனியின் மனைவியும் கொல்லப்பட்டாரா?

image

அமெரிக்கா மற்றும் இஸ்ரேலிய கூட்டுத் தாக்குதலில் ஈரான் உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதையடுத்து புதிய உயர் தலைவராக மொஜ்தபா கமேனி பொறுப்பெற்ற நிலையில் அயதுல்லா அலி கமேனியின் மனைவி மன்சௌரே கோஜஸ்தே பாகர்சாதே கொல்லப்பட்டதாக தகவல் வெளியானது. இதனையடுத்து திட்டவட்டமாக மறுத்துள்ள ஈரானின் ‘ஃபார்ஸ்’ ஊடகம், அவருடன் உயிருடன் இருப்பதாக தெரிவித்துள்ளது.

News March 13, 2026

பாகிஸ்தான் வீரரால் SRH அணிக்கு குவியும் எதிர்ப்பு!

image

தி ஹண்ட்ரட் தொடருக்கான ஏலத்தில் <<19367924>>பாக்., வீரர் அப்ரார் அகமதுவை சன்ரைசர்ஸ் லீட்ஸ் அணி வாங்கியது<<>> அரசியல் சர்ச்சையாக மாறியுள்ளது. SRL அணி, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளரான காவ்யா மாறனுக்கு சொந்தமானது. அப்ராரின் ஏலத்தை ஒருபக்கம் சிலர் பாராட்டினாலும், தேசிய உணர்வை அவமதித்ததாக கூறி #ShameOnSRH, #BoycottSunrisers போன்ற ஹேஷ்டேக்குகள் SRH-க்கு எதிராக SM-ல் குவிந்து வருவதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

error: Content is protected !!