News June 17, 2024

டார்ஜிலிங் ரயில் விபத்து – புதுச்சேரி முதல்வர் இரங்கல்

image

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி இன்று வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில் மேற்கு வங்க மாநிலம் டார்ஜிலிங் மாவட்டத்தில் நடந்த பயங்கர ரயில் விபத்துக்கு குறித்து கேள்விப்பட்டு ஆழ்ந்த வருத்தம் அடைந்தேன், தங்கள் அன்புக்குரியவர்களை இழந்த குடும்பங்களை சார்ந்தவர்களுக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன், காயம் அடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.

Similar News

News March 14, 2026

புதுச்சேரி: ஆயுதங்களுடன் பதுங்கியிருந்தவர்கள் கைது

image

புதுச்சேரி, மங்கலம் பகுதியில் நேற்று போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கீழ் அக்ஹாரம் திருமுருகன் நகரில் பயங்கர ஆயுதங்களுடன் சிலர் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதையடுத்து போலீசார் அங்கு சென்று 9 பேர் கும்பலை கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து நாட்டு வெடிகுண்டு, கத்தி, இரும்பு கம்பி, கஞ்சா ஆகியவற்றை பறிமுதல் செய்தனர். பிறகு கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைதனர்.

News March 14, 2026

புதுச்சேரி: சிறைத்துறை ஐ.ஜி.க்கு கூடுதல் பொறுப்பு

image

புதுச்சேரி சிறைத்துறையின் ஐ.ஜி.யாகவும் மற்றும் துறைமுகத்துறையின் இயக்குனராகவும் மோகன்குமார் பதவி வகித்து வருகின்றார். மேலும் அவருக்கு கூடுதல் பொறுப்பு பதவியாக, புதுச்சேரி கூட்டுறவு துறையின் பதிவாளராகவும், பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை அரசு சார்பு செயலாளர் முருகேசன் நேற்று பிறப்பித்துள்ளார்.

News March 14, 2026

புதுச்சேரி : புதிய VOTER ID டவுன்லோட் செய்வது எப்படி?

image

புதுச்சேரி மக்களே உங்க VOTER ID பழசாவும், ரொம்ப மோசமாவும் இருக்கா? உங்களோட VOTER ID புத்தம் புதுசா மாத்த மத்திய அரசு அறிவுறுத்தி இருக்காங்க. முதலில் -1 <>என்ற இணையதளம்<<>> சென்று உங்க VOTER ID எண்னை உள்ளீடு செய்யவும்.பின் மொபைலுக்கு வரும் OTP-ஐ பதிவிட்டால் புதிய கார்டை உடனே பதிவிறக்கம் செய்யலாம். மொபைல் எண் இணைக்கப்பட்டுள்ளதை மட்டும் உறுதி செய்து கொள்ளுங்கள். SHARE பண்ணுங்க!

error: Content is protected !!