News June 17, 2024
ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும்: ராகுல்

மேற்குவங்கத்தில் நிகழ்ந்த ரயில் விபத்துக்கு மோடி அரசு பொறுப்பேற்க வேண்டும் என ராகுல் காந்தி வலியுறுத்தியுள்ளார். இவ்விபத்தில் பலர் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிப்பதாக கூறிய அவர், மோடி அரசின் அலட்சியம் குறித்து தொடர்ந்து கேள்வி எழுப்புவோம் என்றும் உறுதி தெரிவித்தார். மோடி அரசின் நிர்வாக அலட்சியமே கடந்த 10 ஆண்டுகளில் ரயில் விபத்துகள் அதிகரித்ததற்கு காரணம் என்றும் அவர் குற்றம்சாட்டியுள்ளார்.
Similar News
News April 4, 2026
வேலூரில் தடை; அறிவித்தார் ஆட்சியர்!

இந்திய தேர்தல் ஆணையம், ஏப்ரல் 9-ம் தேதி காலை 7 மணியிலிருந்து 29-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவிற்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளதாக அறிவித்துள்ளது என வேலூர் மாவட்ட ஆட்சித்தலைவர் சுப்புலட்சுமி தெரிவித்துள்ளார்.
News April 4, 2026
பாமகவுக்காக விட்டுக் கொடுத்த சசிகலா

அஇபுதமமுக சார்பில் போட்டியிடும் 4-ம் கட்ட வேட்பாளர்களின் பட்டியலை சசிகலா வெளியிட்டுள்ளார். அதில், ஏற்கெனவே அறிவித்த விளாத்திகுளம், உளுந்தூர்பேட்டை தொகுதிகளின் வேட்பாளர்கள் மாற்றப்பட்டுள்ளனர். அதேநேரம், வாணியம்பாடி & அரக்கோணம் தொகுதியில் அறிவித்த வேட்பாளர்களை சசிகலா வாபஸ் பெற்றுள்ளார். ஏனெனில், அந்த தொகுதிகளில் கூட்டணியில் உள்ள ராமதாஸ் தரப்பு வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என கூறியுள்ளார்.
News April 4, 2026
தங்கம் வாங்க சரியான நேரமா? வியாபாரிகள் சொல்வதென்ன?

சர்வதேச சந்தையில் தங்கம் விலை கிட்டத்தட்ட பழைய நிலைக்கு திரும்பி வருகிறது. ஒரு வாரமாக 1 அவுன்ஸ்(28g) $4,700 என்ற சராசரியில் உள்ளது. மேலும் சில வாரங்களுக்கு இந்த நிலை நீடிக்கும் என தெரிவித்துள்ள வியாபாரிகள் இது தங்கம் வாங்குவதற்கான தருணம் என்றும் கூறுகின்றனர். சர்வதேச சந்தையில் தற்போது 1 அவுன்ஸ் $23 உயர்ந்து $4,676 ஆக உள்ளது. இதேநிலை நீடித்தால் நம்மூர் சந்தையில் சற்று விலை உயர வாய்ப்புள்ளது.


