News June 17, 2024
விழுப்புரம் அருகே கோவில் கும்பாபிஷேகம்

விழுப்புரம் மாவட்டம் தென்குச்சிபாளையம் கிராமத்தில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ பாலமுருகன் ஆலய மகா கும்பாபிஷேகம் இன்று நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக கோவில் கலசம் மீது இன்று காலை 9 மணியளவில் புனித நீர் ஊற்றப்பட்டது. இவ்விழாவில் ஏராளமான பக்தர்களும் பொதுமக்களும் கலந்து கொண்டு பாலமுருகனை வழிபட்டனர்.
Similar News
News April 2, 2026
விழுப்புரம்: ஃபீஸ் இல்லாமல் வக்கீல் வேண்டுமா?

விழுப்புரம் மாவட்டத்திற்கான இலவச சட்ட உதவி மையம், மாவட்ட நீதிமன்றத்தில் இயங்கி வருகிறது. நீங்கள், அங்கு சென்று சட்ட ஆலோசனைகளை இலவசமாக பெறலாம். விழுப்புரம் மாவட்ட இலவச சட்ட உதவி மையம் -04146-2255599, (தமிழ்நாடு) அவசர உதவி – 044–25342441, TOLL FREE – 1800 4252 441, சென்னை ஐகோர்ட் – 044-29550126, ஐகோர்ட் மதுரை கிளை – 0452-2433756 ஆகிய எண்களை தொடர்பு கொள்ளுங்கள். *தெரிந்தவர்களுக்கு ஷேர் பண்ணுங்க*
News April 2, 2026
BIG NEWS – விழுப்புரம்: பொன்முடி உள்ளிட்ட 7 பேர் விடுதலை!

கடந்த 2011 ஆம் ஆண்டு கனிமவளத்துறை அமைச்சராக இருந்த பொன்முடி, அளவுக்கதிகமாக செம்மண் அள்ள அனுமதி அளித்ததால் அரசு ரூ.28 கோடி நஷ்டம் ஏற்படுத்தியதாக வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், பொன்முடி, அவரது மகன் கௌதம சிகாமணி உள்ளிட்ட 7 பேரை விழுப்புரம் முதன்மை நீதிமன்றம் இன்று விடுதலை செய்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
News April 2, 2026
விழுப்புரம்: அரசு பேருந்தில் செல்வோர் கவனத்திற்கு!

அரசு பேருந்துகளில் பயணிக்கும் போது Luggage-ஐ பேருந்துலேயே மறந்து வைத்து இறங்கிவிட்டால் பதட்டபட வேண்டாம். நீங்கள் வாங்கிய டிக்கெட்டில் அந்த பேருந்தின் எண் இருக்கும். அந்த விவரத்தை 044-49076326 என்ற எண்ணிற்கு அழைத்து, எங்கிருந்து எங்கு பயணித்தீர்கள்? என்ன தவறவிடீர்கள் என்பதை கூறினால் போதும். பேருந்தின் நடத்துனர் உங்களை தொடர்புகொண்டு எங்கு வந்து பொருளை வாங்க வேண்டும் என்பதை கூறுவார். ஷேர் பண்ணுங்க.


