News June 17, 2024
மதிய நேர குட்டித் தூக்கத்தால் ஏற்படும் நன்மைகள்

மதிய நேரம் உணவருந்திவிட்டு அரை மணி நேரம் முதல் ஒரு மணி நேரம் வரை குட்டித் தூக்கம் போடுவதை சிலர் வழக்கமாக கொண்டிருப்பர். இதன் நன்மைகளைத் தெரிந்து கொள்வோம் * இதய நலன் மேம்படும் * சர்க்கரை, தைராய்டு போன்ற ஹார்மோனல் பிரச்னை சீராகும் * செரிமான பிரச்சினை சரியாகும் * சோர்வு நீங்கி புத்துணர்ச்சி ஏற்படும் *மன அழுத்தம் குறையும் *நினைவாற்றல் அதிகரிக்கும் என மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.
Similar News
News November 14, 2025
சொந்த திறமையால் முன்னுக்கு வர நினைக்கும் ஜேசன்

ஜேசன் சஞ்சய் படிக்கும் போதே, அவரை ஹீரோவாக்க பலரும் முயற்சி செய்ததாக, விஜய்யின் உறவினரும், நடிகருமான விக்ராந்த் தெரிவித்துள்ளார். ஆனால், இயக்குநராகத்தான் சினிமாவில் அறிமுகமாவேன் என்பதில் ஜேசன் சஞ்சய் உறுதியாக இருந்தார். தந்தையின் பெயரை பயன்படுத்தாமல், தனது தனித்திறமையால் சினிமாவில் வெற்றி பெறவே அவர் முயற்சிக்கிறார். இந்த எண்ணமே அவருக்கு வெற்றியை கொடுக்கும் என்றும் விக்ராந்த் கூறியுள்ளார்.
News November 14, 2025
மாணவர்களுக்கு கூடுதல் சிறப்பு வகுப்புகள்

B.Ed, M.Ed படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகளை முன்கூட்டிய நடத்த ஏதுவாக, கூடுதல் சிறப்பு வகுப்புகள் நடத்தி பாடங்களை முடிக்க கல்வியியல் பல்கலை., உத்தரவிட்டுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக மேற்கூறிய படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் நடத்த காலதாமதமானது. இதனால், நடப்பு கல்வி ஆண்டுக்கான செமஸ்டர் தேர்வுகள் 2026 ஜனவரி 9-ம் தேதியில் தொடங்க பல்கலை., திட்டமிட்டுள்ளதால், இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
News November 14, 2025
‘மின்சார பூவே பெண் பூவே’ கெளரி கிஷன்

உருவக் கேலிக்கு தக்க பதிலடி கொடுத்து ரசிகர்களின் பாராட்டு மழையில் நனைந்தவர் கெளரி கிஷன். 96’ படத்திற்கு பிறகு பிரேக் விட்டு படங்களில் நடித்தாலும், SM-ல் அடிக்கடி புகைப்படங்கள் பதிவிடுவதை அவர் தவறவிடுவதில்லை. இந்நிலையில், மிளிரும் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தி ரசிகர்களின் மனங்களை கொள்ளையடித்து உள்ளார். அந்த புகைப்படங்களை SWIPE செய்து பார்க்கவும்.


