News June 17, 2024

திருப்பதியில் அஜித் சாமி தரிசனம்

image

திருப்பதி திருமலையில் நடிகர் அஜித் இன்று காலை சாமி தரிசனம் செய்தார். அப்போது எடுக்கப்பட்ட ஃபோட்டோ இணையத்தில் வைரலாகி வருகின்றன. வேட்டி சட்டையுடன் அம்சமாக காட்சியளிக்கும் அவரது புகைப்படத்தினை ரசிகர்கள் பகிர்ந்து வருகின்றனர். அஜித் தற்போது, ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் நடித்து வருகிறார்.

Similar News

News March 17, 2026

தமிழகத்தில் குடும்ப ஆட்சி நடைபெறுகிறது: அண்ணாமலை

image

கோவையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய அண்ணாமலை, கடந்த ஐந்து ஆண்டுகளாகத் தமிழகத்தில் காட்டாட்சி மற்றும் குடும்ப ஆட்சி நடைபெற்று வருவதாகக் கடுமையாகச் சாடினார். இந்தச் சூழலிலும் தொடர்ந்து பணியாற்றும் தொண்டர்களுக்கு அவர் நன்றி தெரிவித்தார். மேலும், மார்ச் 8-ம் தேதி மகளிர் தினக் கொண்டாட்டத்தின் போது, 72 வயது முதியவருக்கு நேர்ந்த துயரமான சம்பவம் குறித்தும் தனது உரையில் கவலையுடன் சுட்டிக்காட்டினார்.

News March 17, 2026

FLASH: தங்கம் விலையில் தலைகீழ் மாற்றம்

image

உச்சத்தில் இருந்த தங்கம் விலை, ஈரான் – இஸ்ரேல் போர் தொடங்கிய பிறகு தலைகீழ் மாற்றத்தை சந்தித்து வருகிறது. கடந்த 10 நாள்களில் மட்டும் 22 கேரட் தங்கம் சவரனுக்கு ₹3,200 குறைந்துள்ளது. அதுமட்டுமின்றி, ₹35,000 வரை குறையும் என <<19401126>>ஜெயந்திலால் சலானியும்<<>> தெரிவித்துள்ளார். ஆனால், இந்த மாற்றம் உடனே நிகழ வாய்ப்பில்லையாம். படிப்படியாகவே தங்கம் விலையில் மாற்றம் ஏற்படும் என நிபுணர்கள் தெரிவிக்கின்றனர்.

News March 17, 2026

ஒரு மூலையில் மட்டும் ஏன் SIM கார்டு வெட்டப்பட்டுள்ளது?

image

சிம் கார்டின் இந்த வடிவத்திற்கு பின்னால், ஒரு காரணம் உள்ளது. தொடக்கத்தில் சிம் கார்டுகள் செவ்வக வடிவிலேயே இருந்தன. அப்போது போனில் சிம் கார்டை எப்படி சொருகுவது என பலருக்கும் குழப்பம் ஏற்பட்டது. மாற்றி சொருகுவதால், சிம் கார்டு சேதமடைய வாய்ப்பு இருந்ததுள்ளது. இந்த குழப்பத்தை தீர்க்கவே, ஒரு மூலையில் மட்டும் வெட்டி, போனில் உள்ள சிம் கார்டு Slot-ஐயும் அதற்கேற்ப வடிவமைத்துள்ளனர். SHARE IT.

error: Content is protected !!